Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 9 மார்ச், 2021

மகளிர் தின ஸ்பெஷல்.. சாதம் வடித்த கைகளோ சாதனை செய்கிறது - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

---------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க..!!

---------------------------------------------------

சோமு : ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா...

கடைக்காரர் : என்ன சார்... கோழிப்பண்ணை வைக்க போறேன்னு, போன வாரம் நூறு கோழி குஞ்சு வாங்கிட்டுப்போனீங்க... என்ன ஆச்சு?

சோமு : ஒன்னும் வளரலப்பா...

கடைக்காரர் : சரி சார்... இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வரணும்.

சோமு : வருவோம்ல... போன தடவ என்ன தப்பு பண்ணுனேன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல...

கடைக்காரர் : என்ன சார் தப்பு பண்ணுனீங்க?

சோமு : ரொம்ப ஆழமா நட்டுட்டேன்.

கடைக்காரர் : 😳😳

---------------------------------------------------

அஸ்வின் : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்கிறது சரியாப் போச்சு...

ராமு : ஏன்? என்னாச்சு?

அஸ்வின் : காலையில் மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் அடி பின்னிட்டா.

ராமு : 😛😛

---------------------------------------------------

பெண்ணின் உயர்வு..!

---------------------------------------------------

👭 அடுப்பை ஊதியவள் ஆட்சி செய்கிறாள்,

👭 வேளாண்மையில் ஈடுபட்டவள் வேலை வாய்ப்பை கொடுக்கிறாள்,

👭 அடிமையாக திகழ்ந்தவள் அடிமை தன்மையை ஒழிக்கிறாள், 

👭 சாதம் வடித்த கைகளோ சாதனை செய்கிறது,

👭 வேதனையில் இருந்தவள் வேங்கையாய் பாய்கிறாள்,

👭 பல்லியை கண்டு பயந்தவள் விண்ணிற்கு செல்கிறாள்,

👭 சீவி சிங்காரம் செய்தவள் சீறும் பாம்பாய் மாறினாள்,

👭 பெண்மை அடக்கத்திற்கு மட்டுமல்ல ஆதிக்கம் செலுத்துபவரை அடக்கவும்தான்.

---------------------------------------------------

உங்களுக்கான சில வரிகள்..!

---------------------------------------------------

🎉 மிகச் சிறந்த பண்பு சகிப்புத்தன்மைதான். நம்மை விட உயர்ந்துவிட்டால் அதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஆகவே சகிப்புத்தன்மை இல்லாமல் போவது இத்தகைய சிறுமை தரும் உணர்வுகளால் தான். சிந்தித்துப் பார்த்தால் இவை பெரும்பாலும் நியாயமற்றதாகவே இருக்கும்.

🎉 பொறாமையும், வெறுப்புமே ஒருவனைத் தீய வழிக்கு அழைத்துச் செல்கிறது. தியாக உணர்வு வரும்போது இந்த இரண்டுமே மறைந்து போய் விடுகின்றன. எனவே, பிறருக்காக விட்டுக்கொடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். வீட்டிலும், வெளியிலும் குடும்பத்துக்காகவும், நாட்டுக்காகவும் தொண்டுள்ளம் கொண்டு வாழப் பழகுங்கள். உரிமையை மறந்து கடமையைச் செய்தால் வெற்றியை அடைவீர்கள்.

---------------------------------------------------

அர்த்தங்கள் அறிவோம்..!

---------------------------------------------------

1. அசவல் - கொசு

2. அம்போருகம் - தாமரை

3. அழிவி - கழிமுகப்பகுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக