Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 24 மார்ச், 2021

இந்தியன் ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: பயணிகள் அதிர்ச்சி!

 

ரயில்களில் தீ விபத்தை தடுக்க ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து தடைபட்டிருந்த நிலையில் பின்னர் படிப்படியாக ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பழைய அட்டவணைப் படி அனைத்து ரயில்களும் இயங்கவில்லை என்றாலும் அனைத்துப் பகுதிகளிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ரயில் போக்குவரத்தில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற பயம் பயணிகளிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் ரயில்வே மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லியில் இருந்து டேராடூன் நோக்கி சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் ரயில்களில் தீ விபத்தைத் தடுக்க இரவில் செல்போன் சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பயணிகள் செல்போன் மற்றும் லேப்டாப்புகளை சார்ஜ் போட்டபடி தூங்கி விடுகின்றனர். இதனால் அவை சூடாகி தீ விபத்துகள் ஏற்படுகின்றன.

இதையடுத்து ரயில் பெட்டிகளில் இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன், லேப்டாப் போன்றவை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நேரத்தில் சார்ஜிங் பாயின்டுகளை ஆஃப் செய்ய அந்தந்த பெட்டிகளில் உள்ள ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும், முறையாக அமல்படுத்தப்படவில்லை. தற்போது இந்த உத்தரவை சரிவர பின்பற்ற வேண்டும் என ரயில்வே மீண்டும் தெரிவித்துள்ளது.

இதைக் கண்காணிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ரயில் நிலையங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக