Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 11 மார்ச், 2021

ய ம் கி க் த் வ மு து.. கலைந்துள்ள சொற்களை கண்டுபிடியுங்கள் - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------------------

 இது சிரிப்பதற்கான நேரம்..!!

---------------------------------------------------

மனைவி : ஏங்க... கிச்சன்லருந்து அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு வாங்க...

கணவன் : எங்க வெச்சிருக்க காணோமே?

மனைவி : உங்களால எந்த வேலை தான் செய்ய முடியும்?

கணவன் : நல்லா தேடிட்டேன்... கிடைக்கல

மனைவி : இதகூட தேட முடியலையா? 

கணவன் : இல்ல... நிஜமாவே உப்பு டப்பாவ காணலடி..

மனைவி : உங்களால ஒரு வேலையும் உருப்படியா செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுதான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டுவந்துட்டேன்...

கணவன் : 😩😩

---------------------------------------------------

நோயாளி : டாக்டர்! இன்னைக்கு பாத்த ஆளை நாளைக்கு பாத்தா மறந்து போய்டுது.

டாக்டர் : இந்த வியாதிக்கு நீங்க நேத்துதானே வந்து மருந்து வாங்கிட்டுப் போனீங்க...

நோயாளி : 😖😖

---------------------------------------------------

சில எதார்த்தங்கள்...!!

---------------------------------------------------

சிறந்தவர்கள் என சிலரை நீங்கள் நம்பும் நேரத்தில், இல்லை நாங்கள் சிறந்த நடிகர்கள் என்று அவர்கள் நிரூபித்து விடுகிறார்கள்.

சிலரிடம் யோசித்து பேச வைக்கும். சிலரிடத்தில் பேசவே யோசிக்க வைக்கும்.

நம்பகத்தன்மைக்கு எதிராக நடந்து கொள்பவர்களிடம் ஒன்றி செல்வதை விட ஒதுங்கி செல்வது உத்தமம்.

எல்லோரையும் நம்பிக்கொண்டே இருக்காதீர்கள் ஏனென்றால், சிலருக்கு மட்டும் தான் நம்பிக்கையை காப்பாற்றும் பழக்கம் இருக்கிறது.

---------------------------------------------------

கலைந்துள்ள சொற்களை கண்டுபிடியுங்கள்...!!

---------------------------------------------------

1. க ள் து கு ணு க்

2. ம் டு தா வி யா மை ன ட் ளை

3. மு க ழி ள் றை வ

4. ய ம் கி க் த் வ மு து

5. வா ம் சி தே ய த

விடை :

1. துணுக்குகள்

2. விளையாட்டு மைதானம்

3. வழிமுறைகள்

4. முக்கியத்துவம்

5. தேசியவாதம்

---------------------------------------------------

குறளும்... பொருளும்...!!

---------------------------------------------------

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

பொருள் :

பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சி சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக