தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே தயாரிப்பாளர் தாணு அவர்கள் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடல் வெளியாகும் நேரம் குறித்த தகவலை அறிவித்துள்ளார்.
‘திரெளபதியின் முத்தம் தட்டான் தட்டான்’ என்று தொடங்கும் இந்த பாடல் இன்று மாலை 4.04 மணிக்கு வெளியாகும் என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அந்த பாடலை வரவேற்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ’கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற ’கண்டா வரச்சொல்லுங்க’ மற்றும் ’பண்டாரத்தி புராணம் ஆகிய இரண்டு பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது. அதை போலவே இந்த ’தட்டான் தட்டான்’ என்ற பாடலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக