சாம்சங் பல்வேறு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு பெரும் பட்டியலை வெளியிட்டுள்ளது. நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து புதுப்பிப்பை அறிவித்து வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் ஆண்ட்ராய்டு 10 யுஐ2 எக்ஸ் உடன் இயக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றுமுதல் ரஷ்யாவில் இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கூகுளின் அடிப்படை ஓஎஸ் இரண்டின் சமீபத்திய பதிப்பாகும். முதன்மைரக ஸ்மார்ட்போன் அம்சங்கள் இதில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் மற்றும் மார்ச் 2021 பாதுகாப்பு இணைப்பு வழங்கப்படுகிறது. ரஷ்யாவில் தற்போது உருவாகும் புதிய உருவாக்கம் M515FXXU2CUB7 என பெயரிடப்பட்டுள்ளது. அங்குள்ள அனைத்து பயனர்களுக்கும் இதுகிடைக்க சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செட்டிங்ஸ் உள்ளே சென்று சாப்ட்வேர் புதுப்பிப்புக்குள் நுழைந்து இந்த அப்டேட் பெறலாம். ரஷ்யா பயனர்களுக்கு மட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி எம்51 வைத்திருக்கும் அனைத்து பயனர்களுக்கும் இது விரைவில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக