--------------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
--------------------------------------------------------
ராஜா : எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப நேரம் திருதிருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்.
ஆனந்த் : அப்புறம்?
ராஜா : நான் தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்...!
ஆனந்த் : 😅😅
--------------------------------------------------------
பாபு : என்னது, இன்னிக்கு வீட்டுக்குப் போயி உன் பொண்டாட்டிக்கிட்ட தைரியமா எதிர்த்துப் பேசப்போறியா? எப்ப இருந்துடா இப்படி மாறின?
கோபு : காலையில நான் துடப்பத்தை ஒளிச்சி வெச்சதிலிருந்து.
பாபு : 😛😛
--------------------------------------------------------
தன்னம்பிக்கை வரிகள்...!!
--------------------------------------------------------
ஒருவரை அவரின் கடந்த காலத்தை வைத்து மட்டும் எடை போடாதீர்கள். அவர்களின் எதிர்காலம் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம்.
பழகும் நபர்கள் எல்லாம் நல்ல நினைவுகளை தருகிறார்களோ... இல்லையோ... ஆனால், நல்ல பாடங்களை கற்றுத் தந்துவிட்டு செல்கிறார்கள்.
அடுத்தவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கும் போது உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்ப்பதே புத்திசாலிதனம்.
--------------------------------------------------------
பயனுள்ள குறிப்புகள்...!!
--------------------------------------------------------
அரிசியை டப்பாவில் கொட்டி வைக்கும் பொழுது அதனுள் சிறிது சித்தரத்தையை முழுதாகப் போட்டு வைத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அரிசியில் வண்டு விழாது.
ஏலக்காய் விதைகளை உபயோகித்த பிறகு அதன் தோலை டீத்தூளில் போட்டு வைத்தால் டீ தயாரிக்கும் போது தனியாக ஏலக்காய் சேர்க்க தேவையில்லை. டீ மணமாக இருக்கும்.
எலுமிச்சை சாறுடன் பேக்கிங் சோடாவைக் கலந்து குழாயின் மேற்புறம் உள்ள கரையைத் துடைத்தால், கரைகள் நீங்கி குழாய் பளிச்சென்று இருக்கும்.
உருளைக்கிழங்கு வேக வைத்த நீரில் பாத்திரங்களைக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென மின்னும்.
--------------------------------------------------------
மொக்கை கவிதை...!!
--------------------------------------------------------
துடிப்பது என் இதயம்தான்.
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ.
வலித்தால் சொல்லிவிடு.
நிறுத்தி விடுகிறேன்.
துடிப்பதை அல்ல.
இப்படி ஓவரா ரீல் விடுவதை.😇😇
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக