செவ்வாய், 2 மார்ச், 2021

குழந்தைகளுக்கு முதலில் கற்றுத்தர வேண்டியது எது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

----------------------------------------------------------

காவலாளி : நம் மன்னர் போருக்கு போகும்போது எதுக்கு புலவரை கூட்டிட்டுப் போறாரு?

அமைச்சர் : எதிரி நாட்டு மன்னரைப் புகழ்ந்து பாடி காக்கா பிடிக்கறதுக்காம்.

காவலாளி : 😅😅

----------------------------------------------------------

செந்தில் : என் மனைவி கடையில புடவையை செலக்ட் பண்ண ஒரு நாள் ஆகும்.

வாசு : இது பரவாயில்லையே.. என் மனைவி புடவை கடையை செலக்ட் பண்ணவே ஒரு நாள் ஆகும்.

செந்தில் : 😉😉

----------------------------------------------------------

வாழ்க்கை தத்துவங்கள்...!!

----------------------------------------------------------

ஒரு சந்தோஷமான வாழ்க்கை என்பது மனதின் அமைதித்தன்மையைப் பொறுத்தது.

குழந்தைகளுக்கு முதலில் கற்றுத்தர வேண்டிய பாடம் பணிவுதான்.

உடலிலும், மனதிலும் வலிமை இல்லாமல் போனால் ஆன்மாவை அடைய முடியாது.

மற்றவர்களிடம் எதைக் குற்றம் என்று பார்க்கிறோமோ, அதுவே நமக்கு ஏற்பட்டால் சோதனை என்று அழைக்கிறோம்.

மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மனசாட்சி.

யாருக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லத் தெரிந்தவர், தீர்வை எளிதில் காண்பார்.

----------------------------------------------------------

விடுகதைகள்...!!

----------------------------------------------------------

1. ஒரு மூலையில் தான் இருக்கும். ஆனால் உலகம் முழுவதும் சுற்றி வரும். அது என்ன?

2. மக்கள் என்னை சாப்பிடுவதற்காக வாங்குகிறார்கள். ஆனால் ஒருபோதும் என்னை சாப்பிடுவதில்லை. நான் யார்?

3. எனக்கு உயிர் கிடையாது. ஆனால் ஒரு கையும், 5 விரல்களும் உண்டு. நான் யார்?

4. மேகம் என்னுடைய அம்மா, காற்று என்னுடைய அப்பா, வானவில் என்னுடைய படுக்கை, பூமிதான் நான் ஓய்வெடுக்கும் இடம். நான் யார்?

5. நான் என் வேலையை சரியாகச் செய்தாலும், எல்லோரும் என்னை தலையிலேயே அடிப்பாhர்கள். நான் யார்?

விடை :

1. தபால் தலை

2. தட்டு

3. கையுறை

4. மழை

5. கடிகார அலாரம்

----------------------------------------------------------

விடுபட்ட எழுத்துக்களை கண்டுபிடியுங்க...!!

----------------------------------------------------------

ஒரே எழுத்துதான் இரண்டு இடத்திலும் வரும். கண்டுபிடியுங்கள்...!! 

1. சி_கிமு_கி_கல்

2. சி_னப்ப_

3. _ _ங்கம்

4. ப_பர_

5. தா_பர_

விடை :

1. சிக்கிமுக்கிக்கல்

2. சின்னப்பன்

3. மாமாங்கம்

4. பம்பரம்

5. தாம்பரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்