------------------------------------------------------
காதலைப் பற்றி இவர்கள் சொல்லும் கருத்து...!!
------------------------------------------------------
பரோட்டா மாஸ்டர் :
🍳 காதல் என்பது பரோட்டா மாதிரி. ரெண்டு பக்கமும் நல்லா வேகணும். அப்பதான் ருசியா இருக்கும்.
ஆட்டோகாரர் :
🚕 காதல்னா ரெகுலர் சவாரி மாதிரி இருக்கணும்பா. இப்படி லோக்கல் சவாரி மாதிரி என்னிக்காவது வரக்கூடாது பா.
பாய்ஸ் :
👬 சார், லவ்வுங்கிறது வேற மாதிரியான Feelings. அத சொல்ல முடியாது, அனுபவிக்க தான் முடியும்.
கேர்ள்ஸ்
👭 காதல்னா அன்பு. அன்புனா காதல்.
------------------------------------------------------
இன்றைய கடி....!!
------------------------------------------------------
டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமா தியேட்டர்... உள்ளே போயிட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்...😎
தினமும் காலண்டரைக் கிழிக்கிறது பெரிய விஷயமில்லை... ஒவ்வொரு நாளும் நாம் என்னத்தைக் கிழிச்சோம்கிறது தான் பெரிய விஷயம்...😌
குக்கர் விசிலடிச்சு பஸ்சு போகாது... கண்டக்டர் விசிலடிச்சு சோறு வேகாது...😜
------------------------------------------------------
பாரதியார் பாடல்...!!
------------------------------------------------------
சுட்டும் விழிச் சுடர் தான்..!!
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக