Netflix நிறுவனம் உலகளவில் உள்ள அதன் பயனர்களுக்காக ஒரு புதிய லாகின் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய லாகின் அமைப்பு தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சோதனைக்காக சில தேர்ந்தெடுக்கப்பட்ட Netflix பயனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று நிறுவனம் கூறியுள்ளது.
Netflix பாஸ்வோர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்களா?
பல பயனர்கள் தங்களின் Netflix பாஸ்வோர்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், பின்னர் அதை அவர்கள் அதிக நபர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால், சில நேரங்களில் கணக்கு உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அவர்களுக்குத் தெரியாத நபர்களும் அவர்களின் Netflix கணக்கைப் பயன்படுத்துகின்றனர். இதனால் இரண்டு பாதிப்புகள் உருவாகிறது. முதல் விஷயம், இந்த சிக்கலால் Netflix பெரியளவில் வணிக இழப்பைச் சந்திக்கிறது.
இரண்டு பெரிய சிக்கலை சந்திக்கும் Netflix
இரண்டாவது சிக்கல் என்னவென்றால், Netflix கணக்கு வைத்திருக்கும் உரிமையாளரின் கவனத்திற்குத் தெரியாமல் அவரின் கணக்கு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, உரிமையாளரின் அனுமதி இல்லாமல் Netflix கணக்கை மற்றவர் பயன்படுத்தி ஏமாற்று வேலை செய்கின்றனர். இதைக் கடுமையாகத் தடுக்க நிறுவனம் இப்போது புதிய உள்நுழைவு சரிபார்ப்பு அமைப்பை உருவாக்கி அதைச் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய லாகின் சரிபார்ப்பு முறை, இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்க்கும் என்று நம்பப் படுகிறது.
Netflix பாஸ்வோர்டை சரிபார்க்கும் புதிய லாகின் அமைப்பு
இனி Netflix கணக்கின் லாகின் செயல்முறை தொடங்கப்பட்டதும், உரிமையாளரின் ஸ்மார்ட்போன் சாதனத்திற்கு அனுப்பப்பட்ட விவரங்களைக் கணக்கில் உள்நுழைய முயற்சிக்கும் பயனர்கள் உள்ளிட வேண்டும் என்று Netflix லாகின் கேட்கும். விவரங்கள் கணக்கு உரிமையாளருக்கு மெசேஜ் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. உரிமையாளரிடம் இருந்து தகவலை வாங்கி தான் இனி மற்றவர் லாகின் செய்ய முடியும்.
புதிய Netflix லாகின் கண்காணிப்பு அம்சம்
லாகின் செயல்முறைக்குத் தேவையான அங்கீகரிக்கப்பட்ட விவரங்களை நபர் உள்ளிடும்போது மட்டுமே, அவர் / அவள் கணக்கில் உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள். கணக்கு உரிமையாளர் தனது Netflix கணக்கில் உள்நுழைய முயற்சிப்பதைக் கண்காணிக்க இது அனுமதிக்கும். மேலும், இது மற்றவர்களின் Netflix கணக்கைப் பயன்படுத்தும் நபர்களைச் சொந்தமாகப் பெற ஊக்குவிக்கும் என்று நிறுவும் கூறியுள்ளது.
இதை முன்பே செய்த டிஸ்னி + ஹாட்ஸ்டார்
நெட்ஃபிலிக்ஸ் இப்போது என்ன செய்ய முயற்சிக்கிறதோ, அதைச் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஏற்கனவே ஒரு OTP லாகின் முறையை அறிமுகம் செய்து செயல்படுத்தியுள்ளது என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது. ஒரு தனி நபரின் Netflix கணக்கு விபரங்களை, அதன் உரிமையாளர் வீட்டு நபர்களைத் தவிர்த்து வேறு வெளி நபர்களுடன் கணக்கைப் பகிரக்கூடாது என்று நெட்ஃபிலிக்ஸ் சேவை விதிமுறைகள் தெளிவாக கூறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 'மொபைல் +' திட்டம்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, புதிய அமைப்பு தற்போது சோதனைக்கு உட்பட்டுள்ளது, மேலும் இது உலகளவில் பயனர்களுக்காக எப்போது வெளியிடப்படுகிறது என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை. தெரியாதவர்களுக்கு, நெட்ஃபிலிக்ஸ் தனது 'மொபைல் +' திட்டத்தையும் இந்தியாவில் சோதனை செய்கிறது.
'எச்டி' தரத்தில் நெட்ஃபிலிக்ஸ்
நாட்டில் பயனர்களுக்காக இந்த திட்டம் வருவது இது முதல் முறை அல்ல. இது மாதத்திற்கு ரூ .299க்கு கிடைக்கும், மேலும் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளில் 'எச்டி' தரத்தில் நெட்ஃபிலிக்ஸ் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக