மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக தனித்துவமான மென்பொருள் மற்றும் சாதங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது இந்நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் கொண்டுவரும் சாதனங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் விலைக்கு தகுந்தபடி அனைத்து அம்சங்களும் இருக்கும்.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த ஒரு இளைஞர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் செய்த செயலால் அமெரிக்க அரசு பிடிவாரண்ட் அளித்த சம்பவம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
தீப்பன்ஷூ கேர்
அதாவது கடந்த 2017-ம் ஆண்டு டெல்லி பகுதியை சேர்ந்த தீப்பன்ஷூ கேர் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் கலிபோர்னியாவின் கால்ர்ஸ்பேட்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
2018-ம் ஆண்டு மே மாதம்
அதன்பின்னர் சரியாக ஒரு வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தும், அந்த நிறுவனத்தின் எதிர்பார்ப்பை தீப்பன்ஷூ பூர்த்தி செய்யததால் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
1200 ஊழியர்களின் கணக்குகளை நீக்கியுள்ளார்
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டதால் மிகவும் வருத்தம் அடைந்த தீப்பன்ஷூ அந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பழிவாங்க நினைத்துள்ளார். அதற்குவேண்டி பல மாதங்கள் வேலை செய்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வரை ஹேக் செய்து, அங்கு பணியாற்றும் சுமார் 1200 ஊழியர்களின் கணக்குகளை நீக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
பழி தீர்க்கும் விதமாக இருக்கிறது
பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சர்வரை ஹேக் செய்தது தீப்பன்ஷூ தான் என்று தெரியவர, அந்நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தீப்பன்ஷூ கேர்ரின் இந்த செயல் பழி தீர்க்கும் விதமாக இருக்கிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய ரான்டி கிராஸ்மேன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை தலைவர் தெரிவித்தது என்னவென்றால், தீப்பன்ஷூ செய்தது மிகவும் தவறு, அவர் செய்த இந்த செயல் மூலம் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் இமெயில், அறிமுகமானவர்களின் எண்களின் பட்டியல் போன்ற பல்வேறு முக்கிய விஷயங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
அதன் பின்னர் அமெரிக்க நீதிமன்றம் தீப்பன்ஷூவை கைது செய்வதற்காக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வேலை விஷயமாக அமெரிக்க வந்த தீப்பன்ஷூவை காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர் செய்த இந்த குற்றத்திற்காக நீதிபதிகள் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக