உலகப்புகழ் பெற்ற தொழிலதிபர் பில்கேட்ஸ் என்றால் உலகின் மிகப்பெரிய பணக்காரர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் பில் ம்ற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆரம்பித்து உலகில் பல சமுதாய நற்காரியங்களை செய்து வருபவர் என்றுதான் அனைவருக்கும் தெரியும்.
பில்கேட்ஸ்
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் பில்கேட்ஸ் அவர்கள் தன்னைப் பற்றிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
தனித்துவமான இயங்குதளம்
அதாவது உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் ஆப்பிள் ஐபோன் மாடல்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக புதிய தொழில்நுட்ப வசதி மற்றும் தனித்துவமான இயங்குதளம், சிறந்த பாதுகாப்பு வசதி என அனைத்து அம்சங்களும் இந்த ஐபோன்களில் இருப்பதால் அதிக மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் டெக் ஜாம்பவானான பில்கேட்ஸ் அவர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை மட்டுமே தனது அன்றாட தேவைகளுக்குபயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
கிளப்ஹவுஸ் செயலி
குறிப்பாக கிளப்ஹவுஸ் (Clubhouse) என்ற செயலியின் நேர்காணலில் பங்கேற்ற அவரிடம் செல்போன்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த பில்கேட்ஸ், தான் நாள்தோறும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை மட்டுமே அதிகமாக பயன்படுத்துவதாக தெரிவித்தார்.மேலும் அவர் கூறியது என்னவென்றால், எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டியிருப்பதால், அதற்கு ஐபோன்களை விட ஆண்ட்ராய்டு சாதனங்களே சிறந்ததாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக தன்னிடம் ஒரு ஐபோன் இருப்பதாகவும், ஆனால் அதனை அடிக்கடி பயன்படுத்துவதில்லை எனத் தெரிவித்தார் பில்கேட்ஸ். அதேபோல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை இயக்குவதற்கு மிகவும் எளிதாக இருப்பதாகவும், அதனால் மைக்ரோசாப்ட் மென்பொருள்களை எளிதாக ஆப்ரேட் செய்யகூடியவகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இருக்கும் மக்கள் சிறந்த
இந்த ஐபோன்களை பயன்படுத்துவதில் சில சிக்கல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பில்கேட்ஸ். அதாவது ஐபோன்களில் உள்ள இயக்க முறை சற்று கடினமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பில்கேட்ஸ் அவர்கள் பேட்டியளித்த கிளப்ஹவுஸ் செயலி ஆனது ஐபோன்களில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆண்ட்ராய்டு வெர்சன் போன்களில் இந்த செயலி தற்போது இல்லை.
உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் தனித்துவமான மென்பொருள் என நினைத்து ஐபோன்கள் வாங்கி பயன்படுத்தும் நிலையில், பில்கேட்ஸ் அவர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பற்றி உயர்வாக கூறியுள்ளதால் அனைவரைக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக