Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 16 மார்ச், 2021

ரகம் "உயர்ரகம்" அம்சம் "சிறப்பம்சம்": தரமான ஆசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் சீரிஸ் லேப்டாப் அறிமுகம்!

ரகம்

ஏடிஎம் ரைசன் இந்தியாவில் 5000 சீரிஸ் சிபியூக்களுடன் ஆசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் சீரிஸ் லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

லேப்டாப் பயன்பாடு பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக இருந்து வருகிறது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வேலை, ஆன்லைன் வகுப்பு உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்கு லேப்டாப் அவசியமாக இருக்கிறது. ஏஎம்டி-ன் சமீபத்திய ஜீபியு உடனான அடுத்த தலைமுறை கேமிங் லேப்டாப்களுக்கு காத்திருந்தால் இந்த லேப்டாப் சிறந்த தேர்வாக இருக்கும். அதன்படி ஆசஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள லேப்டாப்கள் குறித்து பார்க்கலாம்.

லெவன் ஜெனரேஷன் இன்டெல் கோர்(எச் சீரிஸ்) லேப்டாப் அல்லது ரைசன் 5000 சீரிஸ் சிபியூக்களுடன் வழங்கும் சமீபத்திய ரோக் ஸ்ட்ரைக்ஸ் சீரிஸ் லேப்டாப்களை ஆசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப்களில் சமீபத்திய RTX3000 சீரிஸ் மொபைல் ஜிபியூக்களும் இடம்பெற்றிருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு இந்த லேப்டாப் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

ஏஎம்டி ரைசன் 7 5800எச் மற்றும் ஆர்டிஎக்ஸ்3060 மூலம் இயக்கப்படும் டியூஎஃப்ஏ ஏ15 ஆர்டிஎக்ஸ்3060 கேமிங் லேப்டாப்பை ஆசஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது முழு எச்டி 1920x1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் கூடிய மலிவு விலை லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப் அடிப்படை மாடல் விலை ரூ.103,990 ஆக இருக்கிறது. இந்த லேப்டாப் ஏப்ரல் 2021 முதல்பாதியில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசஸ் டியுஎஃப்ஏ15 அம்சங்கள்

ப்ராசஸர்கள்: ஏஎம்டி செஜான் ஆர்7-5800 எச்

மெமரி: 32 ஜிபி, டிடிஆர் 4 3200 மெகாஹெர்ட்ஸ் ஆதரவு

டிஸ்ப்ளே: ஐபிஎஸ் முழுஎச்டி 144 ஹெர்ட்ஸ்

கிராபிக்ஸ் கார்ட்: என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 6ஜிபி ஜிடிடிஆர் 6 உடன்

கிராபிக்ஸ் அட்டை: என்விடியா ஜியிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3060 6 ஜிபி ஜிடிடிஆர் 6 உடன் (90 + 5) W (TGP + டைனமிக் பூஸ்ட்)

சேமிப்பு: 2 * PCIE SSD ஸ்லாட் M.2 512GB/1TB

இணைப்பு ஆதரவுகள்: வைஃபை 6 802.11ஏஎக்ஸ் ப்ளஸ் பிடிஎஸ்.1

பேட்டரி: 90வாட்ஸ்ஹவர்

கேமரா/மைக்: எச்டி கேமரா, அர்ரே மைக்

எடை: 2.3 கிலோ

ஆசஸ் ரோக் ஸ்ட்ரைக்ஸ் ஜி15, ரோக் ஸ்ட்ரிக்ஸ் ஜி17 அம்சங்கள்

ஆர்டிஎக்ஸ் 3070 ஜிபியு உடன் ரைசன் ஏஎம்டி ரைசன் 9 5900 எச்எக்ஸ் ஸ்ட்ரிக்ஸ் ஜி15 மற்றும் ஸ்ட்ரிக்ஸ் ஜி17 உடன் கூடிய ஆசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜி17 ஆகிய லேப்டாப்கள் இந்தியாவில் முறையான விலையில் சிறந்த கேமிங் லேப்டாப் ஆக வருகிறது. ஆசஸ் ஸ்ட்ரிக்ஸ் ஜி15 ஏப்ரல் மாதம் முதற்பாதியில் இருந்து ரூ.1,57,990-க்கு கிடைக்கும் எனவும் ஸ்ட்ரிக்ஸ் ஜி17 மார்ச்22 முதல் ரூ.1,50,990 என்ற விலையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆசஸ் ரோக் ஸ்ட்ரிக்ஸ் ஜி15, ஆசஸ் ரோக் ஸ்ட்ரிக்ஸ் ஜி17 சிறப்பம்சங்கள்

ப்ராசஸர்: ஏஎம்டி ரைஜன் 9 5900 எச்எக்ஸ்

ஏஎம்டி ரைசன் 7 5800 எச்

கிராபிக்ஸ்: என்விடியா ஜீஃபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 3070, 8ஜிபி ஜிடிடிஆர்6 விரேம்

ஆப்ரேட்டிங் முறை: விண்டோஸ் 10 ஹோம், விண்டோஸ் 10 ப்ரோ

டிஸ்ப்ளே: 15.6 இன்ச்

முழு எச்டி (1920x1080) ஐபிஎஸ் லெவல் பேனல், 300 ஹெர்ட்ஸ்/3எம்எஸ்

மெமரி: 16ஜிபி+16ஜி டிடிஆர்4 3200 மெகாஹெர்ட்ஸ் எஸ்டிரேம்

ஸ்டோரேஜ்: 2xPCIE SSD ஸ்லாட் M.2 512GB/1TB

பேட்டரி: 90Wh பவர்

பவர் சப்ளை: 240 வாட்ஸ் பவர் அடாப்டர்

டால்பை அட்மாஸ், ப்ளூடூத் 5.0

வண்ணம்: ஒரிஜினல் பிளாக், எக்லிப்ஸ் க்ரே, எலெக்ட்ரோ பங்க்

எடை: 2.7 கிலோ

ஆசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஸ்கேர் 15, ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஸ்கேர் 17 சிறப்பம்சங்கள்

ஆசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஸ்கேர் 15 ரூ.1,54,990 என இருக்கிறது. ஏஎம்டி ரைசன்9 5900 எச்எ்க்ஸ் சிபியு, ஆர்டிஎக்ஸ் 3070 ஜிபி ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் எஸ்சிஆர்17 ஆர்டிஎக்ஸ் 3080 ஜிபி உடன் இணைந்து உலகின் மிக சக்தி வாய்ந்த லேப்டாப் ஆக இருக்கிறது. ஸ்ட்ரிக்ஸ் எஸ்சிஆர் 17 லேப்டாப் விலை ரூ.2,34,990 என விலை உயர்ந்த லேப்டாப் ஆக இருக்கிறது.

இந்த லேப்டாப் 1080 பிக்சல் தெளிவுத்திறன் உடன் கூடிய 300 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சியை கொண்டுள்ளது. இதில் பல்வேறு கூடுதல் அம்சங்கள் இருக்கிறது.

ஆசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஸ்கேர் 15, ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஸ்கேர் 17 சிறப்பம்சங்கள்

ப்ராசஸர்: ஏஎம்டி ரைஜன் 9 5900 எச்எக்ஸ்

ஏஎம்டி ரைஜன் 7 5800எச்

கிராபிக்ஸ்: என்விடியா ஜீஃபோஸ்ட் ஆர்டிஎக்ஸ் 3080, 16 ஜிபி விரேம் வசதி

டிஸ்ப்ளே: 15.6 இன்ச்

மெமரி: 32ஜிபிக்கு மேல்+32ஜிபி டிடிஆர்4 3200 மெகாஹெர்ட்ஸ் எஸ்டிரேம்

ஆடியோ: 4எக்ஸ் ஸ்பீக்கர்கள்

டால்பி அட்மமை, இரட்டை வழி ஏஐ நாய்ஸ் ரத்து அம்சம்

ப்ளூடூத் 5.0

பேட்டரி: 90வாட்ஹவர்

பவர் சப்ளை: 240 வாட்ஸ் பவர் அடாப்டர்

எடை: 15.6 இன்ச் டிஸ்ப்ளே (எடை-2.3 கிலோ) 17.3 இன்ச் டிஸ்ப்ளே (எடை-2.7 கிலோ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக