கூகுள் மீட் மற்றும் ஜூம் செயலிகளை விட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையை அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் புதிய புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
மைக்ரோசாப் நிறுவவனம்
இந்நிலையில் மைக்ரோசாப் நிறுவவனம் தனது மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் லோ பேண்ட்வித் மோட் என்ற வசதியை வழங்க உள்ளது. இந்த புதிய வசதி கண்டிப்பாக மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
வீடியோ கால்
அதாவது வீடியோ கால் மேற்கொள்ள அதிவேக இணைய வசதி கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் அதிக பயனர்கள் இணையும் போது லிமிடெட் நெட்வொர்க் பயன்படுத்துவோருக்கு நிலைமை மோசமாகவும் மாறும் என்றே கூறலாம்.
இணை பயன்பாட்டை மாற்றிக் கொள்ளும் வசதி
எனவே இந்த பிரச்சனையை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் டீம்ஸ் தேவைக்கு ஏற்ப இணை பயன்பாட்டை மாற்றிக் கொள்ளும் வசதியை வழங்க உள்ளது. முதலில் இந்த புதிய அம்சம் கணினியில் மைக்ரோசாப்ட் டீம்ஸ் பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
பின்பு இந்த மாத்திலேயே புதிய அம்சம் உலகளவில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மைக்ரோசாப்ட் 365 ரோட்மேப் வலைத்தளத்தில் இந்த புதிய அம்சம் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லோ டேட்டா மோட்
அந்த வலைத்தளத்தில் வெளிவந்த தகவலின்படி, குறைவான இணைய வேகம் கிடைத்தாலும் டீம்ஸ் வீடியோ கால் மேற்கொள்ளும்போது டேட்டா பயன்பாட்டை குறைக்கும் புதிய லோ டேட்டா மோட் உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் மைக்ரோசாப்ட் டிம்ஸ் வெப் பதிப்பைப் பயன்படுத்த முதலில் ஒரு மீட்டிங் இணைப்பை உருவாக்கி, பின்பு குறிப்பிட்ட மீட்டிங்கில் சேர விரும்பும் நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும் அதை பெறுபவர்கள் வெறுமனே கிளிக் செய்வதின் வழியாக மீட்டிங்கில் சேர அவர்கள் மைக்ரோசாஃப்ட் டிம்ஸ் அக்கவுண்ட்டை உருவாக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல நிறுவனங்கள் கூகுள் மீட் மற்றும் ஜூம் செயலியை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் மைக்ரோசாப்ட் டீம்ஸ் வசதி சிறந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக அதிகளவு பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு மைக்ரோசாப்ட் இக்னைட் 2021 நிகழ்வில் இந்த மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவையில் சுமார் ஆயிரம் பேருடன் வெபினார் செய்வதற்கான வசதி, சேனல் ஷேரிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அமசங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக