-------------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
----------------------------------------------------
பாபு : ஒரு தலைக்கு கட்டிங் செஞ்சா பத்து தலைக்கு இலவசம்னு அந்த சலூன்ல போட்டிருந்தாங்களே போய்ப்பாத்தியா?
கோபு : போய் பாத்தேன்.. ஆனால்..
பாபு : ஏன்? என்ன ஆச்சு?
கோபு : பத்து தலையும் ஒரே உடம்புல இருக்கணுமாம்.
பாபு : 😳😳
----------------------------------------------------
ஆசிரியர் : இது யாரோட கையெழுத்து? (ஃஃஃஃஃஃஃ)
பையன் : என் அப்பாவோட கையெழுத்து.
ஆசிரியர் : உன் அப்பா பெயர் என்ன?
பையன் : ஏழுமலை..
ஆசிரியர் : 😣😣
----------------------------------------------------
இது எப்படி இருக்கு?
----------------------------------------------------
விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, ஹே... நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது?
அழகிய குரலில்! ராக்கெட் சொன்னது... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா...🔥🚀
----------------------------------------------------
இன்றைய புதிர் கேள்வி...!!
----------------------------------------------------
ஒரு மாடி வீடு. முதல் மாடியில் உள்ள ஹாலில் மூன்று பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்குரிய சுவிட்சுகள் கீழேயே மாடிப்படி ஏறும் இடத்தில் உள்ளன.
நீங்கள் முதன்முறையாக அந்த வீட்டுக்குச் செல்கிறீர்கள். உங்கள் திறமையை பரிசோதிப்பதற்காக உங்கள் நண்பர், ஒரு பென்சிலை உங்கள் கையில் கொடுத்து, மேலே மாடியில் உள்ள மூன்று பல்புகளில், எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்று கீழே அடையாளம் செய்யும்படி கூறுகிறார்.
கூடவே ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். அதாவது, ஒரே ஒருமுறை மட்டுமே எந்த பல்பு எரிகிறது என்பதைப் பார்க்க மாடிக்குப் போகலாம்.
நீங்கள் எந்த பல்புக்கு எந்த சுவிட்ச் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?
விடை :
💡 முதல் சுவிட்சைப் போடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து, அந்த சுவிட்சை அனைத்துவிட்டு, அடுத்த சுவிட்சைப் போடுங்கள்.
💡 இப்போது மேலே போகவும்... அங்கே ஒரு பல்பு எரிந்துகொண்டிருக்கும். அது இரண்டாவது சுவிட்சுக்குரிய பல்பு. மற்ற இரு பல்புகளில் எந்த பல்பு சூடாக இருக்கிறது என்று தொட்டுப் பாருங்கள்.
💡 சூடாக இருப்பது, முதலில் போட்ட சுவிட்சின் பல்பு. சூடு இல்லாமல் இருப்பது, மூன்றாவது சுவிட்சுக்குரியது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக