
எஸ்பிஐ கார்டு வாடிக்கையாளர்கள் இப்போது ஜியோ இயங்குதளத்திலும் பரிவர்த்தனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ கார்டுகள் மற்றும் எஸ்பிஐ கார்ட் கட்டண சேவைகள் கடந்த புதன்கிழமை முதல் ஜியோ பே சேவையில் கிடைக்கிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை கடன்மூலமாகவும் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுகிறது.
எஸ்பிஐ கார்டு போர்ட்ஃபோலியோ
மார்ச் 2, 2021 முதல் எஸ்பிஐ கார்டு போர்ட்ஃபோலியோக்கள் ஜியோ பே சேவையில் இயக்கப்பட்டுள்ளது என எஸ்பிஐ கார்டு ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜியோ பே சேவையில் அதன் வழங்கப்பட்ட அட்டைகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் தங்கள் எஸ்பிஐ கார்டை பயன்படுத்தி சர்வதேச இடங்களிலும் ஜியோ பே சேவை மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதில் டிஜிட்டல் பேமெண்ட் சேவை என்பது பிரதானமானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவையான ஜியோ வெற்றி அடைந்ததையடுத்து டிஜிட்டல் சேவைக்குள் இறங்கியது ஜியோ.
ஜியோ பே செயலி
ஜியோ பே செயலியில் டேப் மற்றும் பே., யூபிஐ மூலம் பணம் அனுப்பதல் ரீசார்ஜ் போன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டது. ஜியோ பேமெண்ட்ஸ் சேவை தனது சேவையை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க நேஷனல் பேமெண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்புடன் இணைந்து பணியாற்றுகிறது என கூறப்படுகிறது. ஜியோ செயலியில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இணைப்பின் மூலமும் பேமெண்ட் செய்யும் வசதிகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக