2018, ஏப்ரல் 2ம் தேதி அன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜாவியாவை தொடர்பு கொண்டு ஏடிஎம் காடு விபரங்கள் கேட்ட போது ஜாவியா அதை பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் வங்கிகள் தொடர்ந்து, தங்களது வாடிக்கையாளர்களுக்கு மோசடி தொடர்பான எச்சரிக்கைகளை அளித்து வருகின்றன, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி விவரங்கள், ஏடிஎம் பின் ( ATM PIN) விவரங்கள், கிரெடிட் கார்டு எண்கள் போன்றவற்றை ஒருபோதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று தொடர்ந்து கேட்டுக்கொள்கிறார்கள். பல விதமான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், வாடிக்கையாளர்கள் அடிப்படை முன்னெச்சரிக்கை விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறிவிட்டால் மோசடி நடந்ததற்கு வங்கிகள் பொறுப்பேற்க முடியாது.
குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றம் பாதிக்கப்பட்டவரின் இழப்பீட்டு கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது, ஏனெனில் பாதிக்கப்பட்டவரின் அலட்சியம் காரணமாக மோசடி நடந்துள்ளது.
இந்த வழக்கு குர்ஜி ஜாவியா என்ற ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பானது. 2018, ஏப்ரல் 2ம் தேதி அன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜாவியாவை தொடர்பு கொண்டு ஏடிஎம் காடு விபரங்கள் கேட்ட போது ஜாவியா அதை பகிர்ந்துள்ளார். அடுத்த நாள் அவரது ஓய்வூதியமான ரூ .39,358 அவரது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட அதே நேரத்தில், ரூ .41,500 டெபிட் ஆனது. பதற்றமடைந்த ஜாவியா வங்கியை தொடர்பு கொண்டார், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. தனது புகாரில், வங்கிகள் உடனடியாக பதிலளித்திருந்தால் தனக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது என்று ஜாவியா கூறினார், இதனால் இழந்த தொகையை ஈடு கட்ட வேண்டும் மற்றும் மன உளைச்சலுக்காக ரூ .30,000 இழப்பீடு வேண்டு எனவும் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இருப்பினும், நுகர்வோர் நீதிமன்றம், வங்கி கணக்கு, கிரெடி, டெபிட் கார்டுகள் விவரங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று வங்கிகள் பலமுறை எச்சரித்த போதிலும், ஜாவியா அதனை பகிர்ந்து கொண்டதை காரணம் காட்டி அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிப்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள்
ரிசர்வ் வங்கி தனது 2017 சுற்றறிக்கையில், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்திகளை எஸ்எம்எஸ் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப, அவர்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் தகவல்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. மின்னணு ரீதியாக செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகள் தொடர்பாக நுகர்வோர்களுக்கு உடனடி தகவல்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது
வங்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளை வாடிக்கையாளர்களுக்கு கட்டாயமாக அனுப்ப வேண்டும் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும் எச்சரிக்கைகளை அனுப்ப வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தனக்கு தெரியாமல் நடந்த அங்கீகரிக்கப்படாத மின்னணு பரிவர்த்தனைகள் ஏதேனும் நடந்தால், அது குறித்து வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக்கு உடனடியாக தகவலை தெரிவிக்கும்படி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக