
இந்தியாவின் முன்னணி சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக விளங்கும் கேட்பரி பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் செய்துள்ளதை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், Mondelez Foods Private Limited பெயரில் இந்தியாவில் இயங்கும் கேட்பரி இந்தியா நிறுவனத்தின் மூலம் சிபிஐ வழக்கு தொடுத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கேட்பரி இந்தியா நிறுவனத்தின் ஹரியானா மற்றும் இமாச்சல் அலுவலகம், நிர்வாக அதிகாரிகள் வீடுகள், தொழிற்சாலைகளில் சிபிஐ அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது.
கேட்பரி நிறுவனம் மீது சிபிஐ வழக்கு
இந்தியாவில் சாக்லேட் மற்றும் சாக்லேட் சார்ந்து இருக்கும் பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் கேட்பரி நிறுவனம் 2009-10ஆம் நிதியாண்டில் இமாச்சல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைக்கான உரிமையை முறைகேடான வழிகளில் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
241 கோடி ரூபாய் மோசடி
மேலும் 2009-11 ஆண்டுகளில் மத்திய கலால் வரித் துறை அதிகாரிகளைக் கேட்பரி சதி செய்து அவர்களின் துணையோடு சுமார் 241 கோடி ரூபாய் அளவிலான வரிச் சலுகையைப் பெற்று மோசடி செய்துள்ளது. இது தொடர்பாக கலால் வரித் துறை இன்ஸ்பெக்டர் ஜஸ்ப்ரீட் கவுர் உட்பட 11 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
வரிச் சலுகை
வருமான வரித்துறை, கலால் வரித் துறையிடம் இருந்து வரிச் சலுகை பெற வேண்டும் என்பதற்காகத் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தின் அடிப்படையிலும் வரிச் சலுகை பெறலாம் என்பதால் Mondelez Foods அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துத் தகவல்களைத் திருத்தி 241 கோடி ரூபாய் அளவிலான வரிச் சலுகையைப் பெற்றுள்ளது.
முறைகேடான தொழிற்சாலை விரிவாக்கம்
இதேபோல் வரிச் சலுகை கிடைக்கும் இந்தத் தொழிற்சாலை 2005 முதல் இயங்கி வரும் நிலையில், இந்தத் தொழிற்சாலையில் Bournvita மட்டுமே தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரிச் சலுகை கிடைக்கும் காரணத்தால் இந்தத் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு ஜெம்ஸ் மற்றும் 5 ஸ்டார் சாக்லேட் தயாரித்து வருகிறது Mondelez Foods.
420 வழக்குத் தொடுத்த சிபிஐ
ஆனால் ஜெம்ஸ் மற்றும் 5ஸ்டார் சாக்லேட்களைத் தயாரிக்கத் தனி அல்லது புதிய தொழிற்சாலை Mondelez Foods உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாமல் இந்நிறுவனம் மோசடி செய்துள்ளது இந்தச் சிபிஓ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் வாயிலாக Mondelez Foods மீது 420 வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக