Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 19 மார்ச், 2021

Aadhaar card-Voter ID: ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளதா..!!

Aadhaar card-Voter ID: ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட உள்ளதா..!!

வாக்காளர் ஐடி, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பின் அது தொடர்பான தரவுகளை அரசு, தவறாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாத், தேர்தல் ஆணையம்  தரவு பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார். 

தேர்தல்கள் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்யவும், பல இடங்களில் ஒரே நபர் வாக்களர் அடையாள அட்டைக்கு பதிவு செய்வதை தடுக்கவும், கள்ள ஓட்டு போடுவதை முற்றிலும் ஒழிக்கவும், ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது குறித்து மத்திய அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சட்டம் மற்றும் நீதி, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (Union Minister Of Law And Justice, Communications And Electronics & Information Technology Ravi Shankar Prasad), பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு  வாக்காளர் பட்டியலை (voter id), ஆதார் அட்டையுடன் (Aadhaar card) இணைக்கும் தேர்தல் ஆணையத்தின் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். இதற்கு தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் தேவைப்படும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சில கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், வாக்காளர் பட்டியலை (voter id), ஆதார் அட்டையுடன் இணைப்பது தொடர்பான எந்தவொரு அறிவுறுத்தலும் உச்சநீதிமன்றத்தில் இருந்து இன்னும் மத்திய அரசுக்கு வரவில்லை என்றார். 

வாக்காளர் ஐடி, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பின் அது தொடர்பான தரவுகளை அரசு, தவறாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாத், தேர்தல் ஆணையம்  தரவு பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார். 

முன்னதாக, வாக்காளர் அட்டைகளை ஆதார் உடன் இணைப்பதை மீண்டும் தொடங்க  தனக்கு சட்ட அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு சாதகமாக பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும்,  திருடப்படுவதை தடுக்கவும், தரவு பாதுகாப்பிற்காகவும்,  தரவுகள் திருடப்படுவதை தடுப்பதற்காகவும் எடுக்கப்படும் பாதுகாப்பு அம்சங்களை தீவிரமாக ஆராய்ந்து அதனை மதிப்பீடு செய்யுமாறு, சட்ட அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் கோரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக