Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 9 மார்ச், 2021

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்

தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


தேமுதிக - அமமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது எனத்
 தகவல்

தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக தரப்பில் ஆரம்பத்தில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், கூட்டணியில் மற்ற கட்சிகளும் இருப்பதால் இவ்வளவு இடங்களைத் தர முடியாது என அதிமுக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 23 தொகுதி ஒதுக்க வேண்டுமென அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையின்போது அதிமுகவிடம் தேமுதிக வலியுறுத்தியது.

அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 15 தொகுதிகள் வரையிலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேமுதிகவுக்கு வழங்க முன்வந்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, இந்தக் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் நேற்று முன்தினம் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது இந்தக் கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, தேமுதிக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 3 நாட்களாக நடைபெற்ற நேர்காணல் நேற்றுடன் (மார்ச் 8) நிறைவடைந்தது. இதில், அனைத்துத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 09) கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக