Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 8 மார்ச், 2021

பட்ஜெட் விலைக்கும் குறைவான விலையில் 'நாளை' அறிமுகமாகும் Moto G10 Power, Moto G30..

நாளை மதியம் 12 மணிக்கு அறிமுகமா?

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் மோட்டோ ஜி 10 பவர் மற்றும் மோட்டோ ஜி 30 என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் நாளை (மார்ச் 9ம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் பட்ஜெட் விலைக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மதியம் 12 மணிக்கு அறிமுகமா?

டிப்ஸ்டர் முகுல் சர்மாவின் கூற்று படி, மோட்டோ ஜி 10 பவர் மற்றும் மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன்கள் மார்ச் முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று முன்பே தெரிவித்திருந்தார். அதேபோல், இந்த ஸ்மார்ட்போன்கள் நாளை மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டும் சர்வதேச மாடல்களின் அதே விவரக்குறிப்புகளையும், அதே சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மோட்டோ ஜி 30 மார்ட்போன் விலை (எதிர்பார்க்கப்படும்)

மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன் பாஸ்டல் ஸ்கை மற்றும் பாண்டம் பிளாக் நிறத்திலும், மோட்டோ ஜி 10 பவர் அரோரா கிரே மற்றும் இரைடிசென்ட் பேர்ல் நிறத்திலும் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி 30 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் 180 யூரோ என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ.15,900 ஆகும்.

மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன் விலை (எதிர்பார்க்கப்படும்)

அதேபோல், மோட்டோ ஜி 10 பவர் ஸ்மார்ட்போன் ஐரோப்பா சந்தையில் 150 யூரோ என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.13,300 மட்டுமே இருக்கும் என்று டிப்ஸ்டர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். பட்ஜெட் விலையில் சிறந்த சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்கள் அடுத்த மாதம் வரை பொறுத்திருக்கலாம்.

மோட்டோ ஜி 30 சிறப்பம்சம்

  • 6.5' இன்ச் 1600 x 720 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
  • 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்.டி கார்டு ஆதரவு
  • ஸ்னாப்டிராகன் 662 சிப்செட்
  • குவாட்-கேமரா அமைப்பு
  • 64 எம்.பி பிரைமரி கேமரா
  • 8 எம்பி அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார்
  • 2 எம்பி மேக்ரோ சென்சார்
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • 13 எம்.பி செல்ஃபி கேமரா
  • 4 ஜி
  • வைஃபை
  • புளூடூத் 5.0
  • என்எப்சி
  • ஜிபிஎஸ்
  • 3.5 ஆடியோ ஜாக்
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • 20W வேகமான சார்ஜிங் ஆதரவு
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி

மோட்டோ ஜி 10 பவர் சிறப்பம்சம்

  • 6.5' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஸ்னாப்டிராகன் 460 சிப்செட்
  • குவாட்-கேமரா அமைப்பு
  • 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
  • 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
  • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
  • 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
  • 4 ஜி
  • வைஃபை
  • புளூடூத் 5.0
  • என்எப்சி
  • ஜிபிஎஸ்
  • 3.5 ஆடியோ ஜாக்
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • 10W வேகமான சார்ஜிங் ஆதரவு
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக