போக்கோ நிறுவனம் இந்த மாதம் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ (Poco X3 Pro) மற்றும் போக்கோ எப் 3 (Poco F3) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய தகவல் தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளது. அதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ் 3 ப்ரோவின் விலை
டிப்ஸ்டர் சுதான்சு அம்போர், போக்கோ எக்ஸ் 3 ப்ரோவின் விலை விவரங்களை ட்வீட் செய்துள்ளார். ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் 128 ஜிபி சேமிப்பு மாடல் தோராயமாக ரூ. 21,600 என்ற விலையிலும், இதன் 256 ஜிபி சேமிப்பு மாடல் தோராயமாக ரூ. 26,000 என்ற விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்டோரேஜ்
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மாடல் மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் மடல் என இரண்டு சேமிப்பக மாடல்களாக வெளிவரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ப்ளூ, பிளாக் மற்றும் பிரான்ஸ் வண்ண விருப்பங்களில் வரக்கூடும் என்றும் டிப்ஸ்டர் பகிர்ந்து கொண்டார். இத்துடன் சேர்த்து போக்கோ எப் 3 ஸ்மார்ட்போனும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ முக்கிய சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)
- 6.67' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம்
- ஸ்னாப்டிராகன் 860 சிப்செட்
- 6 ஜிபி + 128 ஜிபி / 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ்
- 5 ஜி அல்ல, 4 ஜி எல்டிஇ இணைப்பு
- 5,200 எம்ஏஎச் பேட்டரி
போக்கோ எப் 3 முக்கிய சிறப்பம்சம் (எதிர்பார்க்கப்படும்)
- 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 120Hz புதுப்பித்தல் விகிதம்
- ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
- 4,520mAh பேட்டரி
இன்னும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், டிப்ஸ்டர்களின் தகவல் இதுவரை பொய்யானதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
மொபைல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக