2 ஏப்., 2021

எட்டு, எட்டைக் கூட்டினால் 1000 வரவேண்டும்... இன்றைய புதிர்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-----------------------------------------------

சிரிப்பதற்கு மட்டுமே...!!

-----------------------------------------------

மதிய சாப்பாட்டில், சாப்பாட்டை விட வெண்டைக்காய் அதிகமாக இருந்தது. அதை பார்த்துவிட்டு

கணவன் : என்னமா இது? இவ்ளோ பொரியல் வெச்சிருக்க...

மனைவி : வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்லுவாங்க... கேள்விப்பட்டு இருக்கீங்களா?

கணவன் : புரிஞ்சிடுச்சு... உன் ஊட்டுக்காரனை ஒரு மிகப்பெரிய ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்டப்போற அப்படித்தான?

மனைவி : ச்சே... ச்சே... வெண்டைக்காய் அதிகமா சாப்பிட்ட மூளை வளரும்னு சொல்றத பொய்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கப் போறேன்...

கணவன் : 😖😖

-----------------------------------------------

ராம் : நண்பா... தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..

வேணு : அடடா.. என் மேல இவ்வளவு அன்பா..

ராம் : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க. அதான்.

வேணு : 😏😏

-----------------------------------------------

புதிர் கேள்வி...!!

-----------------------------------------------

எட்டு, எட்டைக் கூட்டினால் 1000 வரவேண்டும். இந்த எட்டு, எட்டையும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் போட்டு கூட்டிக் கொள்ளலாம். ஆனால் கூட்டுத்தொகை 1000 வரவேண்டும்.

-----------------------------------------------

விடை கீழே...👇👇

-----------------------------------------------

வீசும் காற்றுக்கு பெயர் உண்டா?

-----------------------------------------------

கிழக்கிலிருந்து வருவது கொண்டல்...

தெற்கிலிருந்து வருவது தென்றல்...

மேற்கிலிருந்து வருவது கோடை...

வடக்கிலிருந்து வருவது வாடை...

-----------------------------------------------

டங்க் டுவிஸ்டர்...!!

-----------------------------------------------

கரி படுக்க பரி மட்டம்.... கனி பழுக்க கிளி கொத்தும்.

குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்கு பழி.

மெய்த்தும் பொய்க்கும் பொய்த்தும் மெய்க்கும் பெய்யா மெய்யா மழை.

விடை...

8+8+8+88+888=1000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்