Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 8 ஏப்ரல், 2021

வென்றால் ரூ.10,000 பரிசு.. இதுதான் பந்தயம்.. - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

------------------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்...!!

------------------------------------------------------

ஒரு கடைக்கு சென்ற அமெரிக்கர் அங்கு இருந்தவர்களை பார்த்து ஒரு பந்தயம் வைத்தார்.

 

நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து குளிர்பானங்களை குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா? என்று அறிவித்தார்.

 

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

 

பந்தயத்துக்கு நான் தயார் என்றார்.

 

அடுத்தடுத்து பத்து பாட்டில் குளிர்பானங்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்? என்று கேட்டார்.

 

பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு கடைக்குச் சென்று பத்து குளிர்பானங்களை குடித்துப் பார்த்தேன் என்றார் அவர்.😎😌😇

------------------------------------------------------

தன்னம்பிக்கை வரிகள்...!!

------------------------------------------------------

ஒரு இலக்கு நோக்கி செல்லும்போது, செல்லும் பாதையில் பல முட்புதர்களையும், விஷப் பாம்புகளையும், வேறு பல விரும்பத்தகாதவற்றையும் பார்க்க நேரிடலாம். 

 

இதனால், நம் கவனம் சிதறி, அந்தப் பொருட்களின் மேல் தேவையில்லாமல் சென்றுவிட அனுமதிக்கக்கூடாது. 

 

அந்த முட்புதர்களை வெட்டி எறிவதும், பாம்புகளை அழிப்பதும் நல்லதுதான். ஆனால், அதுவா நமது இலக்கு? இதைச் செய்வதால் வீணாவது நம் நேரம்தானே!

 

நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தேவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். 

 

ரோஜா மலர் முட்களோடுதான் வளர்ந்து மணம் பரப்புகிறது. ரோஜா மலரைப் பறிக்கச் செல்லும் ஒருவர், எல்லா முட்களையும் அகற்றிவிட்டுத்தான் மலரைப் பறிப்பேன் என்றால், அவர் எப்போது முட்களை அகற்றுவது, எப்போது மலர்களைப் பறிப்பது?

------------------------------------------------------

வார்த்தை விளையாட்டு...!!

------------------------------------------------------

 

1) சு ண ல் மூ ற ச் தி த்

 

2) க் ப் ட் ஒ து ழி க ப ட

 

3) ட் கி ட ப டா தூ லி ர் க் ப்

 

4) சீ ள் ர் க தி ங் ரு த் த

 

5) வி தொ ல் ட க க் க க் 

 

விடை :

 

1. மூச்சுத் திணறல்

 

2. ஒழிக்கப்பட்டது

 

3. தூக்கிலிடப்பட்டார்

 

4. சீர்திருத்தங்கள்

 

5. தொடக்கக்கல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக