Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 8 ஏப்ரல், 2021

படகுத்துறையில் நடந்த சுவாரஸ்யம்... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

 

 

------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!!

------------------------------------------------

 

ஒருவர் ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டுவிட்டால் அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகிவிடும்

 

ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத்துறைக்கு வந்து கொண்டிருந்தார் அந்த நபர். அப்போது துறையில் இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா, இந்த படகை விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா காத்திருக்கணுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி குதித்தார் படகில்

 

குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அவர். இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக 'அப்பாடி, ஒரு வழியா படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.

 

படகில் இருந்த ஒருவர் சொன்னார். 'அட, ஒரு நிமிஷம் காத்திருந்தீங்கன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?"🙄😒

------------------------------------------------

பழமொழியும்... விளக்கமும்...!!

------------------------------------------------

 

பழமொழி :

 

சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

 

நாம் அறிந்த விளக்கம் :

 

வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமாட்டான். ஆனால் பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான் என்பது இந்தப் பழமொழியின் நாம் அறிந்த விளக்கம் ஆகும்.

 

விளக்கம் :

 

வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.

 

------------------------------------------------

பயனுள்ள குறிப்புகள்...!!

------------------------------------------------

 

🌟 பாகற்காயை சமைப்பதற்கு முன் நறுக்கிய காயில் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைத்து விட்டு பின்னர் கழுவி சமைத்தால் காயின் கசப்புத் தன்மை குறைவாக இருக்கும்.

 

🌟 வீட்டில் அடை தோசைக்கு மாவு அரைக்கும் போது ஊற வைத்த அரிசி, பருப்புடன் வேக வைத்த உருளைக்கிழங்கு இரண்டைப் போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.

 

🌟 பூண்டை உரிப்பதற்கு முன் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் உரித்தால் தோல் எளிதில் கழன்று விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக