Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 8 ஏப்ரல், 2021

கிளியின் அட்டகாசம்.. வாயடைத்துப்போன எஜமானி.. அப்படி என்ன நடந்தது? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

--------------------------------------------------

வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

மாலா : அட... இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

கடைக்காரர் : அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..

மாலா : நீ ஏம்பா கவலைப்படுற.. நான் சமாளிச்சுக்குறேன்..

கடைக்காரர் : இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்தில குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டுபோய் விட்டுடும்..!

மாலா : பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி.. விலையைச் சொல்லு..!

கடைக்காரர் : சொன்ன கேளுங்க... இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க.. ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க.. விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

(வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..)

கிளி : புது வீடு.. புது எஜமானியம்மா.. பிரமாதம்..!

மாலாவுக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..

கிளி : (மீண்டும் சொல்லிற்று...) புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. பிரமாதம்..

மாலாவுக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்தது.. இவ்வளவு அருமையான கிளியைப் பற்றி அவதூறு சொன்னானே அந்த கடைக்கார கடன்காரன்.. 

சற்று நேரம் கழித்து கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. புது காரு...

அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???

மாலா : 😬😬

--------------------------------------------------

மாயச்சதுரம்...!!

--------------------------------------------------

நீங்கள் முதலில் இடையில் ஒரு எழுத்தை சேர்த்து ஒரு சொல்லை உருவாக்க வேண்டும். பிறகு வேறொரு எழுத்தை சேர்த்து ஒரு சொல்லை உருவாக்க வேண்டும். அடுத்து இரண்டு எழுத்தையும் சேர்த்து ஒரு சொல்லை உருவாக்க வேண்டும்.

_குஇ_குஇ_கு

--------------------------------------------------

விடை கீழே...👇👇

--------------------------------------------------

பிறமொழிச் சொற்கள் - தமிழ் சொற்கள்

--------------------------------------------------

1. விவாகம் - திருமணம்

2. பட்டாளம் - படைப்பிரிவு

3. சன்னல் - காலதர்

4. உத்தரவு - கட்டளை

5. உபயோகம்பயன்

--------------------------------------------------

விடை :

--------------------------------------------------

இங்குஇறகுஇறங்கு     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக