தற்போது 'எனிமி' திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஷால், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
'சக்ரா' திரைப்படத்திற்கு தற்போது 'எனிமி' திரைப்படத்தில்
ஆர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகர் விஷால். பாலாவின் 'அவன் இவன்' திரைப்படத்திற்கு
பிறகு விஷாலும், ஆர்யாவும் இணைந்து நடிக்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் சங்கர் இயக்கும் இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்க பட்டு விட்டன.
இந்நிலையில் தனது தயாரிப்பில் தயாராக இருக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை நாளை
வெளியிட உள்ளதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'இரும்புத்திரை' படத்தை போன்றே சைபர் கிரைமை மையமாக வைத்து விஷாலின் 'சக்ரா' திரைப்படம்
அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அரிமா நம்பி,
இருமுருகன் திரைப்படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எ'னிமி' திரைப்படத்தில்
நடித்து வருகிறார் விஷால். சமீபத்தில் துபாயில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிய எனிமி
படக்குழு, சென்னையில் மீதி காட்சிகளை படமாக்க இருக்கின்றனர்.
'எனிமி' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் நடித்த மிருணாளினி
ரவி நடித்து வருகிறார். நடிகர் ஆர்யா, விஷாலுக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்கிறார். இவர்களுடன்
பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
ஆனந்த் ஷங்கரின் முந்தைய திரைப்படங்களை போன்று 'எனிமி' திரைப்படமும் ஆக்ஷன், திரில்லராக
உருவாகி வருகிறது.
நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் தடம் பதித்து வருகிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல திரைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் நடிகர் விஷால். அத்துடன் தன்னுடைய நடிப்பில் உருவாகும் சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அண்மையில் இவரின் தயாரிப்பில் வெளியான 'சக்ரா' திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று, வெற்றி திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பாக உருவாக உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவித்திருக்கிறார் விஷால். மேலும் 'அது என்ன படம் என்று கண்டுபிடியுங்கள்' என்றும் தெரிவித்துள்ளார். 'துப்பறிவாளன் 2' திரைப்படத்தின் அறிவிப்பாக தான், இது இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அண்மையில் இயக்குனர் மிஷ்கினுடன் ஏற்பட்ட மோதலால், 'துப்பறிவாளன் 2' திரைப்படத்தை தானே இயக்க உள்ளதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக