Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 28 ஏப்ரல், 2021

ஒரு வழியாக 'அந்த' அம்சத்தை நீக்கிய ஆசஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ்.. என்ன விஷயம் தெரியுமா?

 மோட்டார்சைஸ்டு ஃபிளிப் கேமரா மோடு

ஆசஸ் நிறுவனம் சனிக்கிழமையன்று, ஆசஸ் ஜென்ஃபோன் 8 தொடருக்கான வெளியீட்டு நிகழ்வு மே 12 ஆம் தேதி மாலை 07:00 மணிக்கு CEST (10:30 PM IST) இல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஆசஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரவிருக்கும் வரிசையில் ஜென்ஃபோன் 8, ஜென்ஃபோன் 8 ப்ரோ மற்றும் ஜென்ஃபோன் 8 மினி ஆகிய மூன்று சாதனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மோட்டார்சைஸ்டு ஃபிளிப் கேமரா மோடு

இந்த சாதனங்கள் முன்பு ஃபிளிப் கேமரா மோடு உடன் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிறுவனத்தின் டீசரை பார்த்தால் மோட்டார்சைஸ்டு கேமராக்கள் இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

ஏனெனில் இந்த பிராண்ட் ஜென்ஃபோன் 6 அறிமுகத்திற்குப் பின்னர் ஜென்ஃபோன் 7 சீரிஸ் போன்களிலும் அதே கேமரா மோடை அறிமுகப்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, ஜென்ஃபோன் 8 தொடரின் அறிமுகத்தை டீஸ் செய்யும் டீசர் வீடியோவை ஆசஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டது.

ஜென்ஃபோன் 8 ஃபிளிப் கேமரா வடிவமைப்பில் வராது

ந்த வீடியோ ஜென்ஃபோன் 8 ஃபிளிப் கேமரா வடிவமைப்பில் வராது என்பதை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. ஜென்ஃபோன் 8 தொடரின் அறிமுகத்திற்கான டீஸர் வீடியோ ஸ்மார்ட்போனின் முன் பாகத்தை தெளிவாக காட்டியுள்ளது.

இதில் ஆசஸ் ஜென்ஃபோன் 8 தொடரில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்பிளேவில் உள்ள மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச்-ஹோல் கேமரா கட் அவுட் டிசைன் இருப்பதை வீடியோ தெளிவாகக் காட்டியுள்ளது.

ஜென்ஃபோன் 8 ஃபிளிப்

இது ஜென்ஃபோன் 8 ஸ்மார்ட்போன்களில் வரும் எதோ ஒரு மாடலாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் நிச்சயமாக ஃபிளிப் கேமரா இல்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

மேலும், எக்ஸ்டிஏ-டெவலப்பர் வெளியிட்ட அறிவிப்பின் படி ARCore ஐ ஆதரிக்கும் சாதனங்களுக்கான கூகிளின் பட்டியலில் "ஜென்ஃபோன் 8 ஃபிளிப்" என்ற மாடலை கண்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆசஸ் ஜென்ஃபோன் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

பெயருக்குச் செல்வது போல், ஆசஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ் வரிசையில் ​​ஜென்ஃபோன் 8 ஃபிளிப் என்ற மாடலும் இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோடி மாடலான ஜென்ஃபோன் 7 இல் ஒரு ஃபிளிப் கேமராவைக் நிறுவனம் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசஸ் ஜென்ஃபோன் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்

சமீபத்தில் நாங்கள் கண்டறிந்த கீக்பெஞ்ச் பட்டியலின்படி, ஆசஸ் ஜென்ஃபோன் 8 / ஜென்ஃபோன் 8 ப்ரோ குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

64MP சோனி IMX686 சென்சார்

இந்த வரிசையில் மிகச்சிறிய தொலைபேசியாக, ஜென்ஃபோன் 8 மினி, 5.9 இன்ச் கொண்ட 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட டிஸ்பிளே உடன் வெளிவரும். இந்த சாதனம் 64MP சோனி IMX686 சென்சார் மற்றும் சோனி IMX663 சென்சார்களுடன் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக