Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 28 ஏப்ரல், 2021

Bank Holidays in May 2021: மே மாதத்தில் வங்கிகளுக்கு எவ்வளவு நாள் விடுமுறை?

 Bank holidays in April 2020: Here is the list of bank holidays this month


வங்கி விடுமுறை தவிர, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.

அத்தியாவசிய சேவைகளில் வங்கி சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன புதுடெல்லி: கொரோனா தொற்றுநோய் காரணமாக அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, பிற சேவைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் வங்கி சேவை சேர்க்கப்பட்டு உள்ளதால் வங்கிகள் திறந்திருக்கும். ஆனால் மே மாதத்தில், வங்கிகள் பல நாட்கள் மூடப்பட்டு இருக்கும்.

இத்தனை நாட்கள் விடுமுறை மே மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். மே 1 அன்று, மகாராஷ்டிரா நாள் / மே நாள். தொழிலாளர் தினம் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களின் வங்கிகள் இந்த நாளில் மூடப்படும். அதே நேரத்தில், மே 2 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மூடப்படும்.

ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வெவ்வேறு விதிகள் ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்தின்படி, மே மாதத்தில் மொத்தம் 5 நாட்களுக்கு வங்கி மூடப்படும் (Bank Holidays List May 2021). இருப்பினும், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில், உள்ளூர் மாநில அளவில் மட்டுமே பயனுள்ள சில விடுமுறைகள் உள்ளன. எல்லா மாநிலங்களிலும் 5 நாள் விடுமுறை இருக்காது, ஏனெனில் சில பண்டிகைகள் முழு நாட்டிலும் ஒன்றாக கொண்டாடப்படுவதில்லை.

இந்த நாளிலும் வங்கிகள் செயல்படாது வங்கி விடுமுறை தவிர, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் (மே 8 மற்றும் 22) வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இது தவிர, மே 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் உள்ளன.

கொரோனா காரணமாக வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே திறக்கப்படும் நாட்டில் கொரோனா தொற்றுகள் தொடர்ந்து அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளின் அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் (IBA) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வங்கியைத் திறக்க அறிவுறுத்தியுள்ளது. அதாவது, வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே திறக்கப்படும். இதுதொடர்பாக, அனைத்து மாநில அளவிலான வங்கி குழுக்களுக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு IBA கேட்டுக் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக