-----------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-----------------------------------------------------------
கணவன் வெளியூர் சென்றுவிட்டு தொடர் வண்டியில் வந்து இறங்கினார். அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.
அவரைப் பார்த்ததும் மனைவி, 'என்ன நடந்தது? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று கவலையோடு கேட்டாள்.
அதற்கு அவர், 'ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன். காற்று பலமாக முகத்தில் மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது" என்றார்.
'அப்படியானால்.. நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே... உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே?" என்றாள் அவர் மனைவி.
மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னார் கணவன்..
'அது எனக்கு தெரியாதா... நான் அப்படித்தான் நினைத்தேன்... ஆனால் என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை.. காலியாக இருந்தது... அப்படி இருக்கும்போது நான் யாரிடம் சென்று இருக்கையை மாற்றிக்கொள்ளக் கேட்பது
பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக