---------------------------------------------------
கலக்கலான காமெடி...!!
---------------------------------------------------
மிக சுவையாக பேசக்கூடிய ஒரு பேச்சாளர் ஒருமுறை உரையாற்றும்போது...
'என் வாழ்வின் சிறந்த நாட்கள்... இன்னொருவரின் மனைவியோடு செலவழித்த நாட்களே" என்றார். பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துப்போனார்கள்... பேச்சாளர் தொடர்ந்து சொன்னது : 'அது வேறு யாருமல்ல என் அம்மாதான்..." என்றதும் கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது.
இந்த சொற்பொழிவை கேட்ட ஒருவர் இதை தன்வீட்டில் பரிசோதிக்க விரும்பி தன் மனைவிடம் இரவு சாப்பாட்டின்போது இப்படி சொன்னார்... 'அன்பே நான் வாழ்க்கையில் செலவழித்த சிறந்த நாட்கள் இன்னொருவரின் மனைவியுடன்..."
கொஞ்ச நேரத்தில் அடுத்த வரியை சொல்ல அவர் நினைத்தபோது அவருக்கு நினைவு திரும்பி தான் ஒரு மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தார்... தலையில் தாக்கப்பட்டு அவரது உடல் முழுவதும் கொதிக்கும் நீர் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட தீக்காயத்தில் வெந்து போயிருந்ததை புரிந்துக்கொண்டார்...😂😂
---------------------------------------------------
கொஞ்சம் ட்ரை பண்ணுங்க பாஸ்...!!
---------------------------------------------------
வில்வராயநல்லூரில் வில்வ மரத்தடியில் வில்லை வைத்துக்கொண்டு வில்வக்காயை அடித்தான் வீரபத்திரன்.
வண்டி சிறியது, வண்டிக்காரன் புதியது. வண்டிக்காரன் புதியதால், வண்டி சாய்ந்தது.
---------------------------------------------------
அழகு குறிப்புகள்...!!
---------------------------------------------------
💥 சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், சருமம் பொலிவாகவும், சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவி பிடிப்பது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதினால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது, இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.
💥 தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாக வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
---------------------------------------------------
இன்றைய கடி...!!
---------------------------------------------------
வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தர்ப்பம் எது?
.
.
.
.
.
மனைவியின் கன்னத்தில் கொசு உட்காருவது...😛😛
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக