7 ஏப்., 2021

என்ன மார்க் இதெல்லாம்: சிக்னல் ஆப் பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனர்- அப்போ நம்ம நிலை!

 சிக்னல் ஆப் பற்றி வைரலாகும் பகீர் தகவல் || tamil news Viral post on Made in  India Signal, Sanskrit coding is a work of satire

சமூகவலைதளம் என்பது இந்த காலக்கட்டத்தில் பிரதான ஒன்றாக இருந்து வருகிறது. அதிலும் பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்பதில் அதிகப்படியானோர் அக்கவுண்ட் வைத்துள்ளனர். பேஸ்புக், வாட்ஸ்அப் தளங்கள் பயனர்களின் தேவைகளை கண்டறிந்து பல்வேறு புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேஸ்புக் நிறுவன பயன்பாட்டை உலக அளவில் பயன்படுத்தும் பயனர்கள் எண்ணிக்கை அதிகம்

53 கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள்

உலகளவில் சுமார் 53 கோடி பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இணையதளத்தில் கசிந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் அதில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க்கும் ஒருவர் என தெரியவந்திருக்கிறது. மேலும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் சிக்னல் செயலி பயன்படுத்துவதாக வெளியான தகவல் பலரையும் ஆச்சிரியக்க வைத்துள்ளது.

சிக்னல் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் வசதி

வாட்ஸ்அப் தனியுரிமைக் கொள்கை குறித்து விமர்சனங்கள் எழுந்ததையடுத்து பலரும் வாட்ஸ்அப் சுயவிவரங்கள் குறித்த தகவல் வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தில் மாற்று செயலிகளை தேடத் தொடங்கினர். இதையடுத்து பலரும் சிக்னல் எனும் செயலியை பயன்படுத்த தொடங்கினர். சிக்னல் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் வசதி உள்ளது என்பதால் மார்க் ஸக்கர்பெர்க் தனது சுய விவரங்களை கருத்தில் கொண்டு பாதுகாப்புத் தன்மைக் கூடிய சிக்னல் ஆப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது தொலைபேசியில் சிக்னல் செயலியையும் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. சிக்னல் செயலியில் தகவல் பரிமாற்றங்கள் என்க்ரிஃப்ஷன் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதில் மார்க் அக்கறை கொண்டுள்ளதால் சிக்னல் செயலியை பயன்படுத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்னல் செயலியில் தகவல் அனுப்புநர், பெறுநர் இடம் மட்டுமே தகவல்கள் கிடைக்கும். இந்த வசதி பிற குறிப்பிட்ட செயலியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் பயனர்களின் சொந்த விவரங்கள்

53 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் சொந்த விவரங்கள் ஹேக்கர்களுக்கான ஆன்லைன் தளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. பெயர்கள், வசிக்கும் இடம், பிறந்தநாளில் தொடங்கி பல்வேறு விவரங்கள் இதில் அடங்கும். இதுதொடர்பாக பிஸ்னஸ் இன்சைடர் வெளியிட்ட தகவல்களை குறித்து பார்க்கலாம்.

முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள்

தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் என 106 நாடுகளின் பேஸ்புக் பயனர்கள் விவரங்கள் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. பேஸ்புக் தளத்தில் பாதுகாப்பு குறித்து பல்வேறு சிக்கல்களை நிறுவனம் சந்தித்து வருகிறது.

தொலைபேசி எண் மூலம் பயனர்களை தேடும் அம்சம் தடை

இதையடுத்து 2018 ஆம் ஆண்டு முதல் தொலைபேசி எண் மூலம் பயனர்களை தேடும் அம்சத்தை நிறுவனம் தடை செய்தது. பேஸ்புக் நிறுவனம் தங்களது பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வரதான் செய்கிறது.

பழைய தகவல்கள் என அறிவிப்பு

50 கோடிக்கும் அதிகமான பேஸ்புக் பயனர்களின் தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளிட்டவை ஹேக்கர்களின் தளங்களில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னை கண்டுபடிக்கப்பட்டு 2019 ஆகஸ்ட் மாதமே சரி செய்யப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

106 நாடுகளின் பேஸ்புக் பயனர்கள் தகவல்கள்

2019 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பழைய தரவு என பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த சிக்கலை 2019 ஆகஸ்டில் கண்டறிந்து சரிசெய்தோம் என பேஸ்புக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தகவல்கள் பல ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. தகவல்கள் தொகுப்பு கிடைக்கும் தன்மையை முதலில் பிஸ்னஸ் இன்சைடரால் தெரிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்டுள்ளபடி தொலைபேசி எண்கள், பேஸ்புக் ஐடிகள், முழு பெயர்கள், இருப்பிடங்கள், பிறந்த தேதிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் என 106 நாடுகளின் பேஸ்புக் பயனர்கள் தகவல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்