Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

ஓசூரில் பறக்கும் கார் தயாரிக்கும் ஓலா.. கலக்கலான வீடியோ.. 'ஹா ஹா'..!

  ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா லாக்டவுன் காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து தவித்த நிலையில், நீண்ட காலமாக ஆலோசனை செய்து வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ ஓசூரில் அமைத்து வரும் புதிய தொழிற்சாலையில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இந்தியாவை மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஓலா நிறுவனம் நம்ம தமிழ்நாட்டில் அமைக்க இருக்கும் புதிய தொழிற்சாலையில் பறக்கும் கார் தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பறக்கும் காரின் பெயர் என்ன தெரியுமா..? 

ஓலாவின் பறக்கும் கார்

டிவிட்டரில் ஓலா நிறுவனம் ஒரு சூப்பரான வீடியோவை வெளியிட்டு தனது புதிய பறக்கும் கார் குறித்த அறிவிப்பை இந்திய மக்களுக்கும், உலகில் இருக்கும் சக போட்டி நிறுவனங்களுக்குத் தெரிவித்துள்ளது. 6 வருடங்களாகப் பறக்கும் கார் திட்டத்தை மிகவும் ரகசியமாகச் செய்து வருவதாகவும், பல முறை தோல்வி அடைந்து தற்போது வெற்றி அடைந்துள்ளதாகவும் ஓலா நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்

இதைப் பார்க்கும் போது உங்களுக்குச் சதுரங்க வேட்டை படத்தில் டயலாக் நினைவிற்கு வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது. ஆம் ஓலா நிறுவனம் வழக்கம் போல் முட்டாள்கள் தினத்தன்று நகைச்சுவைக்காக இந்த வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளது. ஒரு பொய் உண்மையாக இருக்க என்பதற்காக தனியார் ஒரு இணையப் பக்கத்தையும் ஓலா உருவாக்கியுள்ளது.

ஓலா ஏர்ப்ரோ

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ப்ரோ போல ஓலா இந்தப் பறக்கும் காருக்கு ஏர்ப்ரோ எனப் பெயர் வைத்துள்ளது. வீடியோ முழுவதையும் மிகவும் சிரியஸ் ஆகப் பேசியுள்ளார் ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.

ஜாலியாக வானத்தில் பறக்கலாம்

அவை அனைத்திற்கும் மேலாக இந்தப் பறக்கும் கார் தயாராக உள்ளதாகலும், எல்லோரும் ஜாலியாக வானத்தில் பறக்கும் அனுபவத்தை எளிதாகப் பெற வேண்டும் என்பதற்காகவே இதை உருவாக்கியுள்ளதாகவும், இந்தப் பறக்கும் காரில் டெஸ்ட் ட்ரைவ் செய்ய ஓலாஏர்ப்ரோ.காம் என்னும் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் ஓலா தெரிவித்துள்ளது.

சூப்பர் வீடியோ

ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தக் கலக்கலான வீடியோவை மறக்காமல் பாருங்கள். குறிப்பாக அந்த 0.38 நிமிடத்தை மிஸ் பண்ணிடாதீங்க. இதோடு இந்த பறக்கும் காரை பெங்களூர் சிவாஜி நகரில் கிடைக்கும் கூல்டிரிங் கேன் கொண்டும், பியூரா செல் கொண்டும் தயாரித்துள்ளார்களாம்.. அடேய் ஒரு அளவு இல்லையாடா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக