ரிலையன்ஸ் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.! எப்போது?
ஊர்க்கோடாங்கி
வெள்ளி, ஏப்ரல் 23, 2021
இந்தியாவில்
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் ஆனது வாய், மூக்கு என சுவாசத்துடன் நேரடித்
தொடர்புடைய உறுப்புகள் வழியாக உள்ளே நுழைந்து நுரையீரலை அடையும்போதுதான் நிமோனியா
எனப்படும் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி உயிரழக்கும் நிலை வரை சென்றுவிடுகிறது.
கொரோனாவின்
முதல் அலை
கொரோனாவின் முதல்
அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது
மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும்
வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.
குறிப்பாக இந்த
கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு
தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே
தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா
இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக
மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த
ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று
வருகிறது. பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்க
முன்வந்துள்ளன. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனமும் தங்களது நிறுவனத்தில்
பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது மனைவி, குழுந்தைகள், பெற்றோர்கள் என
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும், இதற்கான செலவை நிறுவனமே
ஏற்கும் என்று தெரிவித்துள்ளது.
வரும் மே-1 ம்
தேதி முதல், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட அவர்களது
குடும்பத்தினருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக தடுப்பூசி செலுத்தப்படும் என
அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசி திட்டத்திற்கு
சுரக்ஷா (R-Surakshaa) என பெயரிட்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.
குறிப்பாக
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின்
நிறுவனர் நீத்தா அம்பானி இருவரும் இணைந்து ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு எழுதியுள்ள
கடிதம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும். பின்பு எந்தவித தாமதமும் இல்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்
கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் தகுதி வாய்ந்த உங்களது குடும்ப
உறுப்பினர்களையும் தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக