Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

சிறுநீரில் சர்க்கரை : தீர்வாகும் மருத மரத்தின் பட்டை, எப்படி எடுத்துகொள்வது!

 urine glucose remedies: சிறுநீரில் சர்க்கரை : தீர்வாகும் மருத மரத்தின் பட்டை,  எப்படி எடுத்துகொள்வது! - how to control urine sugar by using marutham pattai  in tamil | Samayam Tamil

மூலிகைகள் மூலம் தீராத வியாதியையும் தீர்த்துவிடலாம். வாழ்நாள் முழுவதும் பயணிக்கும் வியாதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படியான ஒன்று சிறுநீரில் அதிகமாக இருக்கும் சர்க்கரை அளவு. இதை போக்க மருத மரத்தின் பட்டை உதவும். எப்படி எடுத்துகொள்வது என்று பார்க்கலாம்.

 சிறுநீரில் சர்க்கரை : தீர்வாகும் மருத மரத்தின் பட்டை, எப்படி எடுத்துகொள்வது!

மருதமரம். நெடுங்காலம் வாழக்கூடிய மரங்களில் இவையும் ஒன்று. தமிழ்நாட்டில் கோவில்களில் இதை அதிகம் காணலாம். வேப்ப மரத்திலிருந்து வெளியேறும் காற்று எப்படி நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளதோ அதே போன்று மருதமரத்திலிருந்து வெளியேறும் காற்றும் நோய் குணப்படுத்தக்கூடியதாகவே உள்ளது. அதனால் தான் முன்னோர்கள் தினமும் மருதமரத்தின் அடியில் உட்கார்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தார்கள். இந்த மருத மரத்தின் பட்டையும் பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி பெற்றதாக உள்ளது.

சிறுநீரில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அவர்கள் அதை கட்டுக்குள் கொண்டு வர மருதம் மர பட்டையை எடுத்துகொள்ளலாம். தொடர்ந்து ஒரு மண்டலம் வரை இதை சாப்பிட்டு வந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். இதை எப்படி எடுத்துகொள்வது என்று பார்க்கலாம்.

மருதம் மரத்தின் பட்டை - 10 கிராம்
ஆலமரத்து விழுதின் நுனி - 10 கிராம்
நவல் மரத்தின் பட்டை - 10 கிராம்
அனைத்தையும் எடுத்து சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு நீர்விடவும். இதை கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி காலை, மாலை வேளைக்கு அரை டம்ளர் வீதம் குடித்து வர வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் வரை எடுத்து வந்தால் பலன் தெரியும்.


இதை பயன்படுத்துவதற்கு முன்பு சிறுநீரில் சர்க்கரையின் அளவு எவ்வளவு என்பதை பரிசோதிக்க வேண்டும். பிறகு அதை குறிப்பிட்டு வைத்து இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துகொள்ள வேண்டும்.


பிறகு பரிசோதித்து பார்த்தால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதை பார்க்கலாம். ஒரளவு குறைந்திருப்பதை கண்டால் மீண்டும் 21 நாட்கள் இதை சாப்பிடலாம். ஆனால் இதற்கு தேவையே இல்லாமல் சிறுநீரில் சர்க்கரை அளவு வெகுவாகவே குறைந்திருக்கும்.


இந்த மருதம் பட்டை கஷாயம் எடுத்துகொள்ளும் போது தொடர்ந்து எடுக்க வேண்டும். ஒரு நாள் தவறினாலும் இதன் பலன் எதிர்பார்த்தபடி கிடைக்காது. அதனால் எக்காரணம் கொண்டும் இதை நடுவில் நிறுத்த கூடாது.
நகரத்தில் வசிப்பவர்கள் மரப்பட்டைகளுக்கு எங்கே செல்வது என்று சந்தேகம் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இங்கு வாங்கி பயன்படுத்தலாம்.


மருத மரத்தின் பட்டையை கொண்டு சுவாச காசம், இருதய நோய், மஞ்சள் காமாலை, சுவாச காசம், பித்த வெடிப்பு என பலவிதமான நோய்களை குணப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பதம் உண்டு. சரியான முறையில் பயன்படுத்தினால் பலன் நிச்சயம் கிடைக்கும்.


குறிப்பு

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் பரிசோதனையின் மூலம் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் மேற்கண்ட இந்த குறிப்பு பலன் அளிக்கும். ஆனால் சுயமாக நீங்களே சிகிச்சை மேற்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனையோடு சரியான முறையில் சரியான பதத்தில் எடுத்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பாதுகாப்பான முறையில் ஆரோக்கியம் பெற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக