
தமிழகத்தின் புதிய கட்டுப்பாடுகளின் கீழ், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை இயங்க அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு இருந்ததைவிட, கொரோனா தொற்றின் இந்த வேறுபாட்டின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தொற்று பரவும் வேகமும் மிகவும் அதிகமாகவுள்ளது.
தமிழகத்திலும் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே மாதம் தொற்றின் அளவுகள் உச்சத்தை எட்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று காலை முதல் இன்னும் பல கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் (Tamil Nadu) புதிய கட்டுப்பாடுகளின் கீழ், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை இயங்க அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை OTT தளங்களில் வெளியிட தயாராகி வருகின்றனர்.
பல திரைப்படடங்கள் படப்பிடிப்பும், பிற பணிகளும் முடிந்து வெளியிடப்பட தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறித்தும் எந்த தெளிவான புரிதலும் இல்லாத நிலையில், தயாரிப்பாளர்கள் சில திடமான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
வெளிவர தயாராக இருக்கும் படங்கள்:
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் மற்றும் மாமானிதன், நயன்தாராவின் நெற்றிக்கண், த்ரிஷாவின் ராங்கி, சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் இன்னும் சில படங்கள் வெளிவர தயாராக இருக்கும் படைப்புகள் ஆகும். தற்போதுள்ள நிலையற்ற சூழலால், இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகிய OTT தளங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. OTT தளங்களில் இப்படங்களை வெளியிடுவதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தனுஷின் ஜகமே தந்திரம் படம் ஏற்கனவே நெட்ஃபிக்ஸ் இல் நேரடியாக வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இப்போது, திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், தமிழக அரசு (Tamil Nadu Goverment) தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் அசோசியேஷன் ஆகியவை சில நிவாரணங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளன. தமிழகத்தில் பொதுமுடக்கம் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், இந்த நேரத்தில், மின்சார கட்டணங்கள் தள்ளுபடி உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்றும், தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன், தற்போதிருக்கும் ஜிஎஸ்டிக்கு அதிகப்படியாக இருக்கும் 8% லோக்கல் பாடி பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. இரவு ஊரடங்கு (Curfew), ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, குடும்ப நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் என பலவித கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன. எனினும், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும், தொற்றின் அளவில் சரிவைக் காண முடியவில்லை. இதைத் தொடர்ந்து பிரதமருடனான ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்துகொண்டார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் வெள்ளியன்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மேலும் சில கட்டுப்பாடுகள் சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டன. இன்று காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் உள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக