சாம்சங் நிறுவனம் தனது எஃப் சீரிஸ் இல் புதிதாக இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் என்ற இரண்டு புதிய மாடல்களை தான் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ்
சாம்சங் கேலக்ஸி எஃப் 12 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஈ-காமர்ஸ் தளம் பிளிப்கார்ட் இப்போது வரவிருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் பிரத்தியேக மைக்ரோசைட்டுகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், அறிமுகத்திற்குப் பின்னர் புதிய ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
பிளிப்கார்ட் வழியில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்
பிளிப்கார்ட் வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஃப் 12 ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய விவரக்குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட் பட்டியலின் படி, சாம்சங் கேலக்ஸி எஃப் 12 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவுடன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத் திரையுடன் இடம்பெறும். ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 12 சிறப்பம்சம்
பின் பேனலில், சாதனம் ஒரு சதுர குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப் 12 ஐசோசெல் பிளஸ் (ISOCELL) தொழில்நுட்பம் மற்றும் ஜிஎம் 2 சென்சார் கொண்ட 48 எம்பி குவாட் கேமரா அமைப்புடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஃப் 12 சாதனம் எக்ஸினோஸ் 850 சிப்செட் ஆல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ்
சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் பொறுத்தவரை, இந்த சாதனம் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி-வி எச்டி + டிஸ்ப்ளேவுடன் வரும். இந்த ஸ்மார்ட் போன் மூன்று பின்புற கேமராக்களுடன் பின்புறத்தில் ஒரு செவ்வக டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாம்சங் கேலக்ஸி F02s 1.8GHz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பதைப் பட்டியல் வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
சமீபத்தில் கசிந்த விலையின்படி, சாம்சங் கேலக்ஸி எஃப் 02 எஸ் ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலின் விலை ரூ.8,999 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வெளிவரும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 9,999 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக