Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 21 மே, 2021

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 


இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன்.

இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Infinix Hot 10S  இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85, 12என்எம் சிப்செட் உடன் கார்டெக்ஸ்-ஏ75 கோர் வசதியும் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 

மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

Infinix Hot 10S  இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடல். 

பின்பு 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு மற்றும் சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். 

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. 

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. 

 இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், டி.டி.எஸ் ஆடியோ மற்றும் டார்-லிங்க்அல்டிமேட் கேம் பூஸ்டர் போன்ற அம்சங்களும் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.  

Infinix Hot 10S  வைஃபை, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன். 

மேலும் 4ஜிபி ரேம் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது, பின்பு இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!