தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதி வழங்கபப்ட்டுள்ளது. மேலும், தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டது.
அதிலும், குறிப்பாக பலர் திருமணத்தை காரணமாக காட்டி வைத்து இ-பதிவு செய்து வெளியே சுற்றுவதால் இ-பதிவில் இருந்து திருமண நிகழ்வு நீக்கப்பட்டது.
பின்னர், பல கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுக்கு இ-பதிவு முறையில் சேர்க்கப்பட்டது.
ஆனாலும், பலருக்கு இ-பதிவு முறையில் சந்தேகங்கம் எழுந்து வரும் நிலையில், இ-பதிவு குறித்த சந்தேகங்களை மக்கள் அறிந்து கொள்ள 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக