Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 21 மே, 2021

விற்பனை 'ஜீரோ'.. உற்பத்தியை நிறுத்திய எலக்ட்ரானிக் நிறுவனங்கள்..!

 


இந்தியாவில் இருக்கும் ஹோம் அப்லையன்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதனால் பல லட்சம் ஊழியர்கள் வருமானத்தை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனர்.  கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் மாநில அரசுகள் லாக்டவுன், ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மட்டும் அல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் அல்லாதவற்றை விற்பனை செய்யக்கூடாது என்றும், இதை விற்பனை செய்யும் கடைகளையும் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.  

இந்தக் கட்டுப்பாடுகளால் விற்பனையை மிகப்பெரிய அளவில் இழந்தது மட்டும் அல்லாமல் விற்பனை அளவு கிட்டத்தட்ட ஜீரோ அளவீட்டில் இருக்கும் வேளையில் தொழிற்சாலையை முடியுள்ளது 

ஹோம் அப்லையன்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள்.  தற்போது இந்தியாவில் எல்ஜி, பேனசோனிக், கேரியர் மீடிய, விவோ, ஓப்போ, ஹேயர், காட்ரிஜ் ஆகிய நிறுவனங்கள் தொழிற்சாலை முழுமையாகவும் அல்லது 80 முதல் 90 சதவீத உற்பத்தியைக் குறைத்துள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!