Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 மே, 2021

எனக்கே விபூதி அடிக்க பார்த்தல: மிரண்டு போன கூகுள்- வெறும் ரூ.200-க்கு இதை வாங்கி மிரள வைத்த நபர்!

அரை மணிநேரத்தில் கூகுளின் கட்டுப்பாட்டுக்கு சென்றது

தேடுபொறி தளத்தின் பங்கில் 86%-க்கும் அதிகமானோர் கூகுளை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் அதிகம் பயன்படுத்தப்படும் தேடுபொறி தளமாக கூகுள் இருக்கிறது. கூகுள் நிறுவனமானது தனது சொந்த தேடல்கள் இயக்குவதோடு மட்டுமின்றி பல இயந்திரங்களுக்கான தீர்வுகளையும் வழங்குகிறது.

கூகுள் டொமைன்

பிற சொற்றொடரில் குறிப்பிடும் போது., பிற நாடுகளில் கூகுள் டொமைன் என்ற பெயர் மிகவும் பிரபலமானது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் உயர்மட்ட பாதுகாப்பு அம்சமாகும். இதை எளிதாக வாங்கவோ தவறாக பயன்படுத்தவோ முடியாது. இந்த நிலையில் கூகுள் டொமைன் பெயரை 30 வயது இளைஞர் ஒருவர் மிகக் குறைந்த விலையில் வாங்கியிருக்கிறார். இந்த சம்பவம் கூகுளுக்கே வியப்பாக இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

அர்ஜென்டினாவை சேர்ந்த 30 வயதான வலை வடிவமைப்பாளரான நிக்கோலஸ் டேவிட் குரோனா என்பவர் ப்ரவுஸரில் www.google.com.ar என்ற வார்த்தையை டைப் செய்து தேடியுள்ளார். ஆனால் அது வேலை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆச்சரியமடைந்த அவர் என்ன நடக்கிறது என தொடர்ந்து கூகுளின் URL, google.com.ar என்ற வார்த்தையை தேடியுள்ளார். இந்த வார்த்தை தேடுதலில் கிடைக்கவில்லை இதை அறிந்த அவர் இந்த டொமைன் பெயரை வெறும் 70 பெசோஸ் விலையில் கிடைப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.

டொமைனை வெறும் ரூ.207-க்கு வாங்கிய நபர்

இதை அவர் தவறான நோக்கத்தோடு கையாள வில்லை. இந்த டொமைன் பெயர் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதை வாங்க முயற்சித்துள்ளார். இந்த டொமைனை வெறும் 70 பெசோஸ் (ரூ.207)-க்கு வாங்கியுள்ளார். இந்த தகவலை டுவிட்டரில் பதிவிட்டதோடு அதில் தான் தவறான நோக்கத்தோடு செயல்படவில்லை வாய்ப்பை பயன்படுத்தி வாங்க விரும்பினேன் எனவும் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதை வாங்குவதற்கு என்ஐசி அனுமதியும் கிடைத்துள்ளது.

அரை மணிநேரத்தில் கூகுளின் கட்டுப்பாட்டுக்கு சென்றது

இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் அவர் வாங்கிய அரை மணிநேரத்தில் கூகுளின் கட்டுப்பாட்டுக்கு அது மீண்டும் சென்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தளம் இரண்டு மணிநேரம் டவுனாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை வாங்கும்போது திரையில் பார்த்த விலையை கண்டு உறை்நது போனதாகவும் தற்போது என்ன நடந்தது என தன்னால் நம்ப முடியவில்லை எனவும் குரோனா பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இதை ஒருபோதும் மோசமான நோக்கங்களை கொண்டிருக்கவில்லை எனவும் தான் வாங்குவதை என்ஐசி அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் குரோனாவால் டொமைன் பெயரை தக்கவைக்க முடியவில்லை காரணம் அதை வாங்கிய சிறிது நேரத்திலேயே கூகுள் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிட்டது.

கூகுள் டொமைன் உயர்மட்ட பாதுகாப்பு அம்சமாகும். இதை எளிதாக வாங்கவோ தவறாக பயன்படுத்தவோ முடியாது. கடந்த 2015 ஆம் ஆண்டு இதேபோல் கூகுள் டொமைனை இந்திய மதிப்புப்படி 800 ரூபாய்க்கு உரிமைப்படுத்தினார். அதேபோல் இந்த டொமைனை கூகுள் மீண்டும் கைப்பற்றியது. 2003 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கும் நடந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக