Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 மே, 2021

ஒரு வகையில் லாபம் தான்.! ஆனாலும் விளம்பரங்கள் குறைந்து வருகிறது.! கூகுள் நிறுவனம் தகவல்!

உலகத் தரம் வாய்ந்த

இந்தியாவில் தொடர்ந்து அதிகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். அதிலும் டெல்லி, மும்பை, புனே போன்ற பெரிய நகரங்களில் பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக மருத்துமனைகள் மற்றும் தகன மைதானங்களில் இடம் கிடைக்காத அளவுக்கு பிரச்சனை தீவிரமாகி வருகிறது.

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகில் பல முக்கியமான நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில் நிறுவனங்களின் செலவுகளும் குறைந்து வருகிறது. அதாவது இந்தியா உட்பட பல நாடுகள் கொரோனா வைரஸ் பரவி வந்த சூழலில் ஊரடங்கை கடைபிடித்தது. இதனுடன் சிறு நிறுவனங்கள் முதல் பெருநிறுவனங்கள் வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை ஊக்குவித்தன.

அதிலும் ஒரு சில நாடுகளில் இன்னும் கொரோனா பரவல் அடங்காத சூழலில், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த நிலையை தொடர்கிறது. பின்பு ஒரு சில இடர்பாடுகள் இருந்தாலும் பல நிறுவனங்கள் இதனால் லாபத்தினை சம்பாதித்து வருகிறது.

அதாவது ஒரு நிறுவனம் இயங்குகிறது என்றால், ஒரு அலுவலகத்தை வாடகைக்குப் பிடித்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை வரவழைத்து, மின்சாரம், துப்பரவுப் பணியாளர்கள் என அனைத்து முக்கிய அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, வருகின்றன லாபத்தில்

பெரும்பகுதியை செலவு செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை என்று தான் கூறவேண்டும்.

மேலும் கூகுள் நிறுவனம் உலகத் தரம் வாய்ந்த அலுவலகங்களுக்கு பெயர் பெற்றது. ஆனாலும் ஏறக்குறைய ஒரு ஆண்டுகளுக்கு மேல் கூகுள் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. கூகுள் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுகாலமாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வந்ததால் கூகுள் நிறுவனம் சுமார் 100 கோடி டாலர் வரை சேமித்துள்ளதாக தகவல் வெளவந்துள்ளது.

குறிப்பாக ஊழியர்கள் வராததால் சில லாபங்கள் இருந்தாலும், கூகுள் நிறுவனத்திற்கு வரும் பல விளம்பரங்கள் குறைந்து விட்டதாகவும் கூகுள் நிறுவனம் கவலை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக