4 மே, 2021

அடமான கடன் வாங்க போறீங்களா.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!

அடமான கடன் நிலவரம்

சொத்துக்கு எதிரான கடன் (LAP) என்பது அடமானக் கடனாகும். இது கடன் வாங்குபவரின் சொத்து மதிப்பு ஏற்ப கடன் பெற்றுக் கொள்ள முடியும். வழக்கமாக இந்த கடனில் 40 - 60% வரை பெற்றுக் கொள்ளலாம்.

இதே தனியார் நிறுவனங்கள், வங்கிகளில் இன்னும் அதிகமாக கிடைக்கும். இன்று பெரும்பாலான அடமான கடன்கள் தனியாரிடம் தான் வாங்கப்படுகின்றன. ஏனெனில் அதிக ஆவணங்கள் தேவையில்லை. சுலபமாக கிடைக்கின்றன.

ஆனால் இந்த கடனில் வட்டி விகிதம் என்பது மற்ற கடன்களை காட்டிலும் அதிகம். ஆக அடமானக் கடன் வாங்கும்போது இதனையும் கவனத்தில் கொள்வது நல்லது.

அடமான கடன் நிலவரம்

பொதுவாக வீட்டுக் கடன் அல்லது, டாப் அப் கடனில், அடமானக் கடனை விட வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். ஆனால் டாப் அப் கடனுக்கு ஏற்கனவே நீங்கள் கடன் வாங்கி, அதனை கட்டிக் கொண்டு இருக்க வேண்டும். இதே அடமானக் கடனுக்கு உங்களது சொத்தின் மீது நீங்கள் எந்த வித கடனோ அல்லது ரிஸ்கும் இருக்க கூடாது.

எவ்வளவு வட்டி விகிதம்

அடமானக் கடனில் வட்டி விகிதம் 8.4%ல் இருந்து ஆரம்பமாகிறது. இது அதிகபட்சமாக 14.5% வரையில் இருக்கலாம். இது வாடிக்கையாளரின் சொத்து மதிப்பு, உங்களது சிபில் விவரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு பஜாஜ் பைனான்ஸில் வட்டி விகிதம் 10.1% - 14.5% வரையில் இருக்கிறது.

செயல்பாட்டுக் கட்டணத்தினை பாருங்கள்

பல கடன் வழங்குனர்களும் கடன் தொகையில் 1% செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கின்றனர். இதில் சிறிது மாற்றம் இருக்கலாம். எனினும் அதிகபட்ச கடணம் என்பது இன்னும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இது எஸ்பிஐயில் அதிகபட்சம் 50,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆக கடன் வாங்கும் முன்னரே இதனை தெரிந்து கொண்டு பின்னர் வாங்க வேண்டும்.

கடன் செலுத்தும் கால அவகாசம்

உங்களது அடமானக் கடனுக்கான திரும்ப செலுத்தும் கால அவகாசம் என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று. பெரும்பாலான வங்கிகளில் 15 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கின்றன. பஜாஜ் பின்செர்வ், ஆக்ஸிஸ் வங்கி, பிஎன்பி ஹவுஸிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 20 வருடம் கால அவகாசத்தினை கொடுக்கின்றன. சில வங்கிகள் 10 வருடம் மட்டுமே அவகாசம் கொடுகின்றன. ஆக இதுவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று.

கடன் கொடுக்க எவ்வளவு நேரம்?

பொதுவாக இந்த மாதிரியாக சொத்துக்கு எதிரான கடன்களை முக்கியமான, அவசர தேவைக்காக தான் பயன்படுத்துவோம். ஆக உங்களது சொத்து எதிரான கடன், எவ்வளவு காலத்தில் உங்களுக்கு கிடைக்கும் என்பதையும் கடன் வழங்குனரிடம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் சொத்து மதிப்பு மதிப்பீடு, விண்ணப்பதாரரின் கடன் தகுதிகள் உள்ளிட்டவற்றை மதிப்பிட சில வாரங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஆக உங்களது அவசர தேவைக்கு ஏற்ப இருக்குமா? என்பதையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

எஸ்பிஐ & பேங்க் ஆப் பரோடா

எஸ்பிஐ - வட்டி விகிதம் 8.80 - 9.65% - செயல்பாட்டுக் கட்டணம் 1%, அதிகபட்சம் ரூ.50,000, இவ்வங்கியில் 7.5 கோடி ரூபாய் வரையில் பெற்றுக் கொள்ளலாம். 15 வருடம் கால அவகாசம்.

பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம் 8.20 - 13.85% - செயல்பாட்டுக் கட்டணம் 1%, (குறைந்தபட்சம் ரூ.8500 - அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்), இவ்வங்கியில் ரூ.2 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரையில் அடமானக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். 15 வருடம் கால அவகாசம்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா & ஃபெடரல் வங்கி

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 8.40 - 10.65% - செயல்பாட்டுக் கட்டணம் 1%, (குறைந்தபட்சம் ரூ.5000 - அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரையில்), இவ்வங்கியில் ரூ.5 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரையில் அடமானக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். 15 வருடம் கால அவகாசம்.

ஃபெடரல் வங்கியில் வட்டி விகிதம் 10.10% முதல் ஆரம்பம், இங்கு செயல்பாட்டுக் கட்டணம் 1%, (குறைந்தபட்சம் ரூ.3000 ), இவ்வங்கியில் 5 கோடி ரூபாய் வரையில் அடமானக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். 15 வருடம் கால அவகாசம்.

ஹெச்டிஎஃப்சி வங்கி & ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கியில் வட்டி விகிதம் 10.50 - 11.00% - செயல்பாட்டுக் கட்டணம் 1%, (குறைந்தபட்சம் ரூ.10,000), இவ்வங்கியில் ரூ.5 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரையில் அடமானக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். 20 வருடம் கால அவகாசம்.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் வட்டி விகிதம் 8.75 - 11.40% - செயல்பாட்டுக் கட்டணம் 1.5% வரை, (குறைந்தபட்சம் ரூ.4,500), இவ்வங்கியில் குறைந்தபட்சம், அதிகபட்ச கடன் தொகை என்பது குறிப்பிடப்படவில்லை. 15 வருடம் கால அவகாசம்.

பஜாஜ் பின்செர்வ் & பிஎன்பி ஹவுசிங்

பிஎன்பி ஹவுசிங்கில் வட்டி விகிதம் 9.50 - 11.00% - செயல்பாட்டுக் கட்டணம் 2% வரை, இவ்வங்கியில் அதிகபட்ச கடன் தொகை என்பது சொத்து மதிப்பில் 60% ஆகும். இதிலும் 20 வருடம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

பஜாஜ் பின்செர்வில் வட்டி விகிதம் 10.10 - 14.50% - செயல்பாட்டுக் கட்டணம் 6% வரை, இவ்வங்கியில் அதிகபட்ச கடன் தொகை என்பது 3.5 கோடி ரூபாயாகும். இதிலும் 20 வருடம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

கனரா வங்கி & கரூர் வைஷ்யா வங்கி

கனரா வங்கியில் வட்டி விகிதம் 9.95 - 12.00% ஆகும். இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணம் 0.5% (குறைந்தபட்சம் ரூ.5000 முதல் அதிகபட்சம் 50,000 ரூபாய் வரையில்). இவ்வங்கியிலும் 10 கோடி ரூபாய் வரையில் அடமானக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். எனினும் இவங்கியில் கால அவகாசம் என்பது வெறும் 10 வருடம் மட்டுமே.

கரூர் வைஷ்யா வங்கியில் வட்டி விகிதம் 9.00 - 12.00% ஆகும். இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணமாக 0.50% வசூலிக்கப்படுகிறது. இவ்வங்கியிலும் 10 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் அடமானக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். இவங்கியில் கால அவகாசம் என்பது வெறும் 100 மாதங்கள் உண்டு.

டாடா கேப்பிட்டல் & பேங்க் ஆப் மஹராஷ்டிரா

டாடா கேப்பிட்டல் நிறுவனத்தில் வட்டி விகிதம் 10.10% முதல் ஆரம்பமாகிறது. இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணமாக 2% வரையில் விதிக்கப்படுகிறது. இவ்வங்கியிலும் 10 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் அடமானக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். இவங்கியில் கால அவகாசம் என்பது 15 வருடமாகும்.

பேங்க் ஆப் மஹராஷ்டிராவில் வட்டி விகிதம் 8.55 - 9.55%. இவ்வங்கியில் செயல்பாட்டுக் கட்டணமாக 1% வரையில் விதிக்கப்படுகிறது. இவ்வங்கியிலும் 2 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் அடமானக் கடனாக பெற்றுக் கொள்ளலாம். இவங்கியில் கால அவகாசம் என்பது 10 வருடங்கம் மட்டுமே. இது ஏப்ரல் 30 நிலவரப்படி எடுக்கப்பட்ட தரவுகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்