சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இதனை உறுதி செய்யும் வகையில் புது ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இந்நிறுவனம் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் கொரிய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் கேலக்ஸி ஏ8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
சாம்சங் கேலக்ஸி ஏ8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் QHD+ AMOLED டிஸ்பிளேவடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
4500 எம்ஏஎச் பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ஸ்டீயிரோ ஸ்பீக்கர்கள், கைரேகை சென்சார், 5ஜி கனெக்டிவிட்டி, யுஎஸ்பி டைப் சி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக