Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 25 மே, 2021

ரூ.999 விலையில் மிரட்டலான ஸ்போர்ட்ஸ் டிசைன் இயர்பட்ஸ் வாங்க ஆசையா? அப்போ இதான் பெஸ்ட் சாய்ஸ்..


pTron நிறுவனம் நேற்று இந்தியாவில் புதிய ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்பட்ஸ் ஸ்போர்ட்ஸ் என அழைக்கப்படும் இந்த புதிய ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் ஸ்டீரியோ வயர்லெஸ் இயர்போன்ஸ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த மிரட்டலான ஆடியோ சாதனத்தை pTron நிறுவனம் நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

pTron பாஸ்பட்ஸ் ஸ்போர்ட்ஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ்

pTron பாஸ்பட்ஸ் ஸ்போர்ட்ஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் இப்போது இன்ஸ்பையரிங் எல்லோவ், ப்ளூமிங் ப்ளூ மாற்று கிளாசிக் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த புதிய ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் அமேசான் இந்தியாவில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. pTron நிறுவனம் இந்த புதிய பாஸ்பட்ஸ் ஸ்போர்ட்ஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை ரூ .999 என்ற நம்ப முடியாத விலையில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது.

பாதுகாப்பான டூயல்-லாக் செயல்பாடு

இது இப்போது முதல் அமேசானிலிருந்து வாங்குவதற்குக் கிடைக்கிறது. பாதுகாப்பான டூயல்-லாக் செயல்பாடு மற்றும் காதுக்கு மேல் பொருத்தக்கூடிய ஹூக் உடன் நம்பகமான இயர்பட்ஸ் கிரிப்பை இந்த சாதனம் வழங்குகிறது. மிரட்டலான ஸ்போர்ட்ஸ் டிசைன் வடிவமைப்புடன், கூடுதல் சார்ஜிங் ஜூஸை வழங்க சார்ஜிங் கேஸுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

32+ மணிநேர பிளேபேக் நேரம்

pTron பாஸ்பட்ஸ் ஸ்போர்ட்ஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் சிறப்பம்சமே, இது நீண்ட 32+ மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. pTron பாஸ்பட்ஸ் ஸ்போர்ட்ஸ் இயர்பட்ஸ் 8 மணிநேரம் பிளேபேக் அனுபவத்தையும் மற்றும் சார்ஜிங் கேஸில் இருந்து 24 மணிநேரம் பிளேபேக் நேரத்தையும் இது வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ்கள் 1 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகின்றது.

சோலோ பட் யூஸ்

இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் ப்ளூடூத் 5.1 இணைப்பு மற்றும் யூ.எஸ்.பி சி ஃபாஸ்ட் சார்ஜ் உடன் வருகிறது. அவை ஐபிஎக்ஸ் 4 வாட்டர் ப்ரூப் சான்றிதழ் உடன் வருகின்றது. வயர்லெஸ் இயர்பட்ஸ் 10 மீட்டர் இணைப்புடன் 6 மிமீ டிரைவருடன் வருகிறது. இது ஹை-ஃபை ஸ்டீரியோ ஒலியை ஆழமான பாஸுடன் வழங்குகிறது. மேலும் இது வாய்ஸ் அஸிஸ்டண்ட்ஸ், டூயல் மைக், சோலோ பட் யூஸ் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது. சோலோ பட் யூஸ் மூலம் நீங்கள் ஒற்றை இயர்பட்ஸை மட்டும் பயன்படுத்தலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!