Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 25 மே, 2021

ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி? மிக எளிமையான முறை தான். வாங்க பார்க்கலாம்.




இந்தியாவில் வாழும் குடி மக்களுக்கு ரேஷன் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பண்டிகை பேரிடர் போன்ற காலங்களில் தமிழக அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது சலுகைகள் அறிவித்து வருகின்றன இந்நிலையில் பலர் ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர் அந்த வகையில் தற்போது அதனை விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.


புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்பவர்கள் முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.


அதில் நீங்கள் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க வேண்டும் என்கின்ற பகுதியை தேர்வுசெய்யவும். அடுத்ததாக உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை, முகவரி என அனைத்தையும் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம் என அதில் உள்ள பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்ததாக கீழே உங்கள் குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்கின்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களுடைய அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு நீங்கள் உங்களுடைய குடும்ப அட்டையின் வகையை தேர்வு செய்யவும் அரிசி அல்லது சர்க்கரை அட்டை என இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். அதன் பின்பு குடியிறுப்பு சான்று பதிவேற்றம் செய்யவேண்டும்.

ரேஷன் கார்டு அட்டை வாங்குவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆதாரங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, எரிவாயு நுகர்வோர் அட்டை, வரி ரசீது, வாடகை ஒப்பந்தம், குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம், வீடு ஆவணம், மின்சார ரசீது, தொலைபேசி ரசீது, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, வீட்டு வசதி வாரிய ஆவணங்கள், தபால் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் இணைக்க வேண்டும்.

அடுத்து எரிவாயு இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு விண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர் உங்களது தொலைபேசி எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். அந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம்.

விண்ணப்ப நிலையைப் பார்க்க வேண்டிய இணைப்பு:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!