அமைவிடம் :
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் உள்ள 'பெரிய கோவிலாக" ஸ்ரீ மயூரநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாயூரத்தின் கணவர் என்ற பொருளுடைய 'மயூரநாதசுவாமி" இக்கோவிலின் முதன்மை கடவுளாவார். பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில் பிரம்மா இத்தலத்து இறைவனாம் மயூரநாதரை பூஜித்தான் என்று புராண வரலாறு கூறுகிறது.
மாவட்டம் :
அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.
எப்படி செல்வது?
சென்னையிலிருந்து பேருந்து மற்றும் ரயில் சேவைகள் உள்ளன. மேலும் கும்பகோணம், திருவாரூர், சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
கோவில் சிறப்பு :
காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம் மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும். ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற பழமொழியே இதன் பெருமையைக் காட்டுகிறது.
அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாக கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும்.
துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகும். அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டாலும் கடைசி நாளான 30ம் நாள் காவிரியில் நீராடி மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.
கோவில் திருவிழா
வைகாசியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் துலா ஸ்நானம் விசேஷம், ஆடி கடைசி வெள்ளியில் லட்சதீபம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை :
செய்த தவறுக்கு மனம் வருந்தி, மன்னிப்பு வேண்டுபவர்கள் காவிரியில் நீராடி சிவனை வழிபட்டு மனஅமைதி பெறலாம். இங்கு நடனம் பயில்பவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் சிவன், அம்மனுக்கு புது வஸ்திரம் சாற்றி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக