Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 24 மே, 2021

இன்றைய கடி.. மரத்தில் காய்க்கும் நெல்.. சிரிக்கலாம் வாங்க - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------

ஒரு நாள் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடந்தினாங்க.

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.

போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.

காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப...

'கல்யாணத்தை நிறுத்துங்க"-ன்னு ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தால் போலீஸ்...

போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

ஏன்?

.
.
.
.
.
நினைவு இருக்கா?

ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த குற்றதுக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

நீதி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.😅😅
-------------------------------------
வெற்றி நம் விரல் நுனியில்..!
-------------------------------------
👍 மெதுவாக சிந்தனை செய்யுங்கள், ஆனால் விரைவாக செயல்படுத்துங்கள்.

👍 பிறருக்கு உதவியாக வாழும் வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையாகும்.

👍 அறிவு மௌனத்தை கற்றுத்தரும். அன்பு பேசக் கற்றுத்தரும்.

👍 எந்த செயலிலும் வேகமும், விவேகமும் இருக்க வேண்டும்.

👍 அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது.

👍 சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை.

👍 சொல்லில் நிதானம்... சுகத்தை கொடுக்கும்.

👍 சிந்தனையும் செயலும் ஒன்றாகிவிட்டால் வெற்றி நிச்சயம்.

👍 வாழ்க்கையில் வெற்றி பெற தேவை சுறுசுறுப்பும், ஊக்கமும் தான்.

👍 மனதை ஒரு நிலைப்படுத்தினால் வெற்றி நம் விரல் நுனியில்....
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
1. மரத்தில் காய்க்கும் நெல் எது?
.
.
.
'நெல்"லிக்காய் 

2. காலையில் படிக்க வேண்டிய நூல் எது?
.
.
.
'காப்பி"யம்
-------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!