Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 24 மே, 2021

ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா..?? வெளியான புதிய தகவல்..!!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். 

கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் வெளியீட முடிவு செய்தனர். அதன் படி வருகின்ற ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தளத்தில் பரவி வருகிறது. அதாவது படத்தில் நடிகர் தனுஷ் ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறாராம், அதன்பிறகு அப்பகுதியில் நடக்கும் தவறான செயலை தட்டி கேட்க ஒரே ராத்திரியில் ஊர்முழுக்க ரௌடியாக பிரபலமாகிறாராம்” அதன் பின் நடக்கும் கதைதான் சஸ்பென்ஸ் என்றும் கூறப்படுகிறது. மேலும் பொறுத்திருந்து படம் வெளியான பின் இதுதான் படத்தின் கதையா என்பதை பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!