Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 25 மே, 2021

அருள்மிகு ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை.


அமைவிடம் :

சென்னை கேம்ப் ரோடு அருகில் மாடம்பாக்கம் எனும் ஒரு அழகிய கிராமத்தில் எழுந்தருளி ஆட்கொள்கிறார் ஸ்ரீதேனுபுரீஸ்வர சிவபெருமான். ஒரு கோடி லிங்கங்களுள் ஒன்றாக அமைந்துள்ள மிகவும் அற்புதமான கொம்பினாலான லிங்கம் இத்தலத்தில் அமைந்துள்ளது.

மாவட்டம் :

அருள்மிகு ஸ்ரீதேனுபுரீஸ்வரர் திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை. 

எப்படி செல்வது?

சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் பேருந்துகளில், ராஜகீழ்பாக்கம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் சென்றால் மாடம்பாக்கம் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு. தாம்பரத்தில் இருந்து குறித்த நேரத்தில் கோயிலுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.

கோவில் சிறப்பு :

ஸ்ரீதேனுபுரீஸ்வரர் லிங்கம் கல்லினால் ஆனதல்ல. பிரபஞ்சத்திலுள்ள கோடான கோடி பசுக்களின் ஆதிமூல தெய்வமான ஸ்ரீகாம தேனுவின் குளம்பு பதிந்த தெய்வீகக் கொம்பினால் ஆன லிங்க மூர்த்தியே ஸ்ரீதேனுபுரீஸ்வரர்.

மலர் மாலை, எலுமிச்சை மாலை, வடை மாலை ஆகியவற்றை சுவாமிக்கு அணிவித்து பார்த்திருப்பீர்கள். இங்குள்ள வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவிக்கிறார்கள். 

இவருக்கு வெள்ளைப்பூசணியில் நெய் விளக்கேற்றுவதும் வித்தியாசமான வழிபாடு. 

சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, ஆலமரம் இல்லாமல் உள்ளார். துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது.

மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் உள்ளது. 

கோவில் திருவிழா :

சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

வேண்டுதல் :

இங்கு வேண்டிக்கொள்ளும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

மூலவருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு அதனை பிரசாதமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

வக்கிரதோஷம் உள்ளவர்கள் லிங்கத்திற்கு மல்லிகைப்பூ மாலை அணிவித்து வழிபடுகின்றனர். இதனால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

கிரகதோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து சரபேஸ்வரரை வேண்டினால் தோஷம் நீங்கப்பெற்று நலமாய் வாழ்வது உறுதி என்கின்றனர்.

நேர்த்திக்கடன் :

வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவித்து, வெள்ளைப் பூசணியில் நெய் விளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்தும், விசேஷ திருமஞ்சனம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!