Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 14 மே, 2021

பழக்கடைக்காரருக்கு பிடித்த மொழி எது? இன்றைய கடி... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------
சிதறடிக்கும் ஜோக்ஸ்...!!
-------------------------------------
மனைவி : இந்த காக்கா கத்தறதப் பாத்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது.
கணவன் : எப்படி சொல்றே?
மனைவி : எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவெச்சுதான் சொல்றேன்.
கணவன் : 😏😏
-------------------------------------
நீதிபதி : எதுக்கு அந்த நகைக்கடைக்கு தொடர்ந்து இரண்டு தடவை திருடப் போன?
திருடன் : முதல் தடவை திருடிக்கிட்டு போன மோதிரம், என் பொண்டாட்டி விரலுக்கு பத்தலீங்கய்யா. அதான்!
நீதிபதி : 😅😅
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?

2. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன?

3. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான். அவன் யார்?

4. ராஜா, ராணி உண்டு, நாடு இல்லை. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை. அது என்ன?

5. அடி மலர்ந்து நுனி மலராத பூ. அது என்ன? 

1. அமைதி 

2. தண்ணீர் 

3. கைகாட்டி 

4. காட்ஸ்

5. வாழைப்பூ
-------------------------------------
சிந்தனை துளிகள்..!
-------------------------------------
💥 உன் அறிவு ஒரு விளக்கு, மற்றவர்கள் தங்கள் மெழுகுவர்த்திகளை அதில் ஏற்றிக்கொள்ளட்டும்.

💥 அறிவு குறைந்த நிலையில் தான் உணர்ச்சிகளும், ஆற்றலும் வேகம் உடையதாக விளங்குகின்றன.

💥 செல்வம் பெருகப் பெருக ஆசை அதிகமாவது போல, அறிவு பெருகப் பெருக அதில் ஆர்வம் அதிகமாகும்.

💥 அறிவு ஆட்சி செய்யும் இடத்தில், ஆற்றல் துணை செய்யும்.

💥 அறிவாளி முன்யோசனையின் மூலம் தீயவற்றைத் தவிர்க்கிறார்.

💥 அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது அது மனதை ஒருமுகப்படுத்துவது.
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
பழக்கடைக்காரருக்கு பிடித்த மொழி எது?
.
.
.
.
.
பழமொழி

பேய்க்கு பிடித்த தாளம் எது?
.
.
.
.
.
வேதாளம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக